Page Loader
14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

எழுதியவர் Sindhuja SM
May 15, 2024
02:39 pm

செய்தி முன்னோட்டம்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, மே 15 தமிழகத்தில் அநேக இடங்களிலும்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: தேனி,விருதுநகர் மற்றும் தென்காசி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,இராமநாதபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை,மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மே 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திண்டுக்கல்,தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம்

தமிழகம் 

மே 17

தமிழகத்தில் அநேக இடங்களிலும்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி மற்றும் திண்டுக்கல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.