நாய் கடித்து குதறியதால் தெலுங்கானாவில் 5 மாத குழந்தை பலி
செய்தி முன்னோட்டம்
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள தந்தூரில் இன்று ஒரு ஐந்து மாத குழந்தையை நாய் கடித்து கொன்றது.
பாபுசாய் என்ற அந்த சிறுவன் தனது வீட்டில், கவனிப்பாரற்று தூங்கிக் கொண்டிருந்தபோது, நாய் உள்ளே புகுந்து அந்த சிறுவனை தாக்கியது.
குழந்தையின் தந்தை தத்து, தனது மகன் இறந்துவிட்டதை அறிந்ததும் அந்த நாயைக் அடித்து கொன்றார்.
சம்பவத்தின் போது சிறுவனின் பெற்றோர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
80க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் அந்த நாய் தத்துவின் பணியிடத்தில் செல்லப்பிராணியாக இருந்ததாகக் கூறியுள்ளனர்
ஆனால், அந்த யூனிட்டின் உரிமையாளர் இதை மறுத்து அது வழிதவறிச் யூனிட்டுக்குள் நுழைந்த தெரு நாய் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா
கடந்த மாதம் தெருநாய்கள் கடித்து இரண்டு குழந்தைகள் பலி
நாட்டில் நாய்கள் கடித்தல் மற்றும் நாய் தாக்குதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2022 முதல் 2023 வரை நாய் கடி சம்பவங்கள் ஆண்டுக்கு ஆண்டு 26.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த டிசம்பரில் தெரிவித்தது.
கடந்த மாதம் தெருநாய்கள் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.
ஏப்ரல் 14 ஆம் தேதி, ஹைதராபாத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது சிறுமி தெருநாய்களால் கடித்து கொல்லப்பட்டார்.
மற்றொரு சோகமான சம்பவத்தில், ஏப்ரல் 13 அன்று உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் தெருநாய்கள் தாக்கியதில் நான்கு வயது சிறுமி உயிரிழந்தார்.