Page Loader
'கோவை சிறையில் கொல்லப்படுவேன்': கதறிய சவுக்கு சங்கர் 

'கோவை சிறையில் கொல்லப்படுவேன்': கதறிய சவுக்கு சங்கர் 

எழுதியவர் Venkatalakshmi V
May 13, 2024
01:25 pm

செய்தி முன்னோட்டம்

பெண் காவலர்களை அவதூறாக விமர்சித்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர், தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை தாண்டி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் விசாரணையின் போது துன்புறுத்தப்பட்டதாகவும், அதில் அவரது கையை விசாரணை அதிகாரிகள் உடைத்துள்ளார் என சவுக்கு சங்கரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக மதுரை நீதிமன்றத்தில் வலது கையில் கட்டுடன் அவர் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த உத்தரவிட்டிருந்தனர்.

சவுக்கு சங்கர் 

கதறிய சவுக்கு சங்கர் 

இந்த நிலையில் சவுக்கு சங்கரை போலீஸ் விசாரணைக்கு அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர். அப்போது கூடியிருந்த நிருபர்களை பார்த்து சவுக்கு சங்கர், "எனது கையை உடைத்தது கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார்" என கூறியவர், கோவை சிறையில் தான் சமாதி என மிரட்டுவதாகவும், என்னை கொலை செய்துவிடுவார்கள் என புகார் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

கதறிய சவுக்கு சங்கர்