இலவச மின்சாரம், சீனாவிடமிருந்து நிலத்தை மீட்பது உட்பட அரவிந்த் கெஜ்ரிவாலின் 10 தேர்தல் வாக்குறுதிகள்
செய்தி முன்னோட்டம்
ஆம் ஆத்மி கட்சிக்காக(ஏஏபி) இன்று பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 10 உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார் .
இன்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், "2024 மக்களவை தேர்தலுக்கான கெஜ்ரிவாலின் 10 உத்தரவாதங்களை' இன்று நாங்கள் அறிவிக்க உள்ளோம். எனது கைது காரணமாக இது தாமதமானது. ஆனால் இன்னும் பல கட்ட தேர்தல்கள் எஞ்சியுள்ளதால் அது இன்று அறிவிக்கப்படும். " என்று தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவாதங்கள் பற்றி மற்ற இண்டியா கூட்டணி கட்சிகளிடம் இன்னும் விவாதிக்கவில்லை என்றும் ஆனால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இந்தியா
அரசுப் பள்ளிகளில் சிறந்த கல்வி, இலவச மின்சாரம்
"நாட்டில் 24 மணி நேர மின்சாரம் வழங்குவோம். நாட்டில் 3 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. ஆனால்நாம் பயன்படுத்துவது 2 லட்சம் மெகாவாட் மட்டுமே. நம் நாட்டில் தேவைக்கு அதிகமாக மின்சாரம் தயாரிக்க முடியும். அனைத்து ஏழைகளுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவோம். " என்று அவர் தெரிவித்துள்ளார்.
"அனைவருக்கும் நல்ல சிறந்த இலவசக் கல்வியை ஏற்பாடு செய்வோம். தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் சிறந்த கல்வியை வழங்கும். இதற்கு ரூ.5 லட்சம் கோடி தேவைப்படும். இதற்கு மாநில அரசுகள் ரூ.2.5 லட்சம் கோடியும், மத்திய அரசு ரூ.2.5 கோடியும் வழங்கும்." என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
டெல்லி
அரவிந்த் கெஜ்ரிவாலின் உத்தரவாதங்கள்
1. மின்சாரம் உத்தரவாதம்: நாடு முழுவதும் முதல் 200 யூனிட் இலவச மின்சாரத்துடன் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும்.
2. கல்விக்கு உத்தரவாதம்: அனைவருக்கும் இலவச கல்விக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை சிறந்ததாக மாற்றுவதாகவும் வாக்குறுதி.
3. சுகாதார உத்தரவாதம்: தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் உருவாக்கப்படும்.
4. சீனாவிடம் இருந்து நில மீட்பு உத்தரவாதம்: இந்தியாவின் நிலம் சீனாவிடம் இருந்து மீட்கப்படும். ராணுவத்திற்கு சுதந்திரம் அளிக்கப்படும்.
5. அக்னிவேர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உத்தரவாதம்: மோடி அரசால் தொடங்கப்பட்ட அக்னிவீர் திட்டம் கைவிடப்படும்.
டெல்லி
அரவிந்த் கெஜ்ரிவாலின் உத்தரவாதங்கள்
6. MSP உத்தரவாதம்: விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும்.
7. மாநில அந்தஸ்து உத்தரவாதம்: டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
8. வேலைவாய்ப்பு உத்தரவாதம்: ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்படும்.
9. ஊழலுக்கு உத்தரவாதம்: ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பான சொர்க்கம் இந்தியா என்ற கொள்கையிலிருந்து விடுபடுவோம். ஊழலில் இருந்து நாட்டை விடுவிப்போம்.
10. ஜிஎஸ்டி மீதான உத்தரவாதம்: சீனாவின் வர்த்தக திறனை மிஞ்சும் நோக்கத்தில், சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) எளிதாக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்படும்.