வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் கங்கை நதியில் பிரதமர் மோடி பிரார்த்தனை
2024 மக்களவைத் தேர்தலுக்கு வாரணாசி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். தனது ஆவணங்களை அவர் இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில் நேற்று, பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நகரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மேலும் பலவற்றைச் செய்வேன் என்று உறுதியளித்து 6 கிமீ நீள பேரணியை நடத்தினார். "உன் பாசத்தின் நிழலில் 10 ஆண்டுகள் கடந்தது எப்படி என்பது எனக்கு தெரியவில்லை. அம்மா கங்கா என்னை அழைத்ததாக முன்பு சொன்னேன். இன்று என் தாய் கங்கா என்னைத் தத்தெடுத்து கொண்டாள்" என்று பிரதமர் மோடி இன்று உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட இரு பெரும் தலைவர்கள்
வாரணாசி மக்களவைத் தொகுதியில் 2014ஆம் ஆண்டு, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து, அப்போதைய பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருந்த பிரதமர் மோடி போட்டியிட்டபோது, வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் நடந்தது. அப்போது, 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றது, வாரணாசியை பாஜகவின் கோட்டையாக மாற்றியது. ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட வாரணாசி, பல ஆண்டுகளாக பாஜக மற்றும் காங்கிரஸுக்குப் போட்டியை உண்டாக்கும் போர்க்களமாக இருந்து வருகிறது. 1957 முதல், அந்த தொகுதிகளில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்றது. அதன் பிறகு 1991 முதல் பாஜகவும் அந்த தொகுதிகளில் செல்வாக்கைப் பெற்றது.