
16 உயிர்களை காவு வாங்கிய பங்கிற்கு அனுமதி இல்லை, விளம்பர பலகைக்கு மோசமான அஸ்திவாரம் என கண்டுபிடிப்பு
செய்தி முன்னோட்டம்
கடந்த திங்கள்கிழமை மும்பையின் காட்கோபரில் உள்ள பெட்ரோல் பம்ப்பின் விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த பெட்ரோல் பங்கிற்கு ஆக்கிரமிப்பு சான்றிதழ் (OC) இல்லை என்று வியாழக்கிழமை வெளியான ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
ஒரு கட்டிடம், அனைத்து தொடர்புடைய சட்டங்கள், கட்டிடக் குறியீடுகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குகிறது என்பதை உறுதிப்படுத்த நகராட்சி அமைப்புகளால் OC சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஆனால் சம்மந்தப்பட்ட அந்த பங்கிற்கு தரப்படவில்லை.
இந்த அறிக்கை வெளியான பிறகு, தற்போது பெட்ரோல் பங்கின் அனுமதி நிலையை கண்டறியும் முனைப்பில் உள்ளனர் விசாரணை அதிகாரிகள்.
உரிம விசாரணை
உரிம நிலையை உள்ளடக்கியதாக விசாரணை விரிவடைகிறது
மும்பையில், பெட்ரோல் பம்புகள் போன்ற வணிகங்களுக்கு பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) அனுமதித்த உரிமம் தேவை.
அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) இடங்களில் பெட்ரோல் பம்புகள் கட்டுவதற்கு தற்காலிக உரிமம் வழங்கப்படும்.
இருப்பினும், இந்த குறிப்பிட்ட பம்பிற்கு தேவையான செயல்பாட்டு உரிமம் பெறப்பட்டதா என்பது இப்போது விசாரணையில் உள்ளது.
பம்ப் செயல்படும் நிலம், வீட்டுவசதித் துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது மற்றும் வணிக பயன்பாட்டிற்கு வருவாய்த் துறையின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
வருவாய்த் துறையிடம் அனுமதி பெறாமல் பெட்ரோல் பங்க் தளத்தில் வணிகச் செயல்பாடுகளுக்கு அனுமதி அளித்தது எப்படி என்பது குறித்த தெளிவு இல்லாதது, தற்போது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
விளம்பர பலகை
மோசமான அஸ்திவாரத்துடன் கட்டப்பட்ட விளம்பர பலகை
இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்திப்படி, விளம்பர பதாகை அடியோடு பெயர்ந்து பங்கின் மீது விழுந்துள்ளது.
அந்த பதாகையின் அடித்தள தூண்கள் 4-5 அடி ஆழம் கூட இல்லை என தெரியவந்துள்ளது. அடியோடு பெயர்ந்து வருவது என்பது, அதன் பலவீனமான அடித்தளத்தால் மட்டுமே நடக்கும் என்று நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக அச்செய்தி தெரிவிக்கிறது.
பதாகையின் பலவீனமான மற்றும் மோசமான அடித்தளமே விழுந்ததற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
17,040 சதுர அடியில் மிகப்பெரிய விளம்பர போர்டு என லிம்கா சாதனை புத்தகத்தில் இந்த போர்டு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) இடிந்து விழுந்த விளம்பர பலகை தங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டது என்று தற்போது தெரிவித்துள்ளது.