இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. குறிப்பாக தென்காசிக்கு பறந்த தேசிய பேரிடர் எச்சரிக்கை
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தென்காசி, தேனி, விருதுநகர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசி மக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்காசி மாவட்ட மக்களுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை சார்பாக அனுப்பப்பட்டுள்ள குறுஞ்செய்தி எச்சரிக்கையில், "அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் அதிகனமழை பெய்ய வாய்ப்பு" என அந்த எச்சரிக்கை தெரிவிக்கிறது.
ஆரஞ்சு அலர்ட்
தென்காசி மக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை தென்காசி மாவட்ட மக்களுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை "அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் அதிகனமழை பெய்ய வாய்ப்பு" பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தேசிய பேரிடர் மேலாண்மை... pic.twitter.com/BwkEF8ZeFA— Thanthi TV (@ThanthiTV) May 15, 2024