11 இறப்புகளை தொடர்ந்து சார் தாம் யாத்ரீகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
இந்த ஆண்டு சார் தாம் யாத்திரையில் பங்கேற்கும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. கேதார்நாத்துக்கு 1,55,000க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களும் , யமுனோத்ரிக்கு 70,000க்கும் அதிகமான யாத்ரீகர்களும், கங்கோத்ரிக்கு 63,000க்கும் அதிகமான யாத்ரீகர்களும் பயணம் செய்யவுள்ளனர். மே 12 அன்று திறக்கப்பட்ட பத்ரிநாத் தாம்-இற்கு இது வரை கிட்டத்தட்ட 45,000 யாத்ரீகர்கள் சென்றுள்ளனர். எனினும், பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மே 10ஆம் தேதி உத்தரகாண்டில் யாத்திரை தொடங்கியதில் இருந்து குறைந்தது 11 யாத்ரீகர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது.
யாத்ரீகர்களின் உடல்நிலை குறித்த முழுமையான தகவல்களை வழங்க வேண்டியது அவசியம்
உத்தரகாண்ட் அரசாங்கம், இந்த இறப்புகளுக்கு முதன்மையான காரணங்களாக அடிப்படை சுகாதார நிலைமைகளுடன், 50 வயதுக்கு மேற்பட்ட வயதான யாத்ரீகர்கள் காரணம் என்று கூறுகிறது. இதனை தொடர்ந்து, கர்வால் கமிஷனர் வினய் சங்கர் பாண்டே, யாத்ரீகர்கள் எந்தவொரு மருத்துவப் பிரச்சினைகளுக்கும் நேர்மையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். "நான்கு யாத்ரீக இடங்கங்களும் அதிக உயரத்தில் அமைந்துள்ளன. வெப்பமான தட்பவெப்பநிலையிலிருந்து மாறுகின்ற தனிநபர்களுக்கு இது சவால்களை ஏற்படுத்துகின்றன," என்று அவர் கூறினார். அதனால், 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட யாத்ரீகர்களுக்கான சுகாதாரப் பரிசோதனைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநில சுகாதார நிர்வாகம் 44 சிறப்பு மருத்துவர்கள் உட்பட 184 மருத்துவர்களை யாத்திரை பாதைக்கு அனுப்பியுள்ளது.
விஐபி தரிசனம் நிறுத்தப்பட்டது
அதிக கூட்டத்தை நிர்வகிக்க, சில பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் 'விஐபி தரிசனம்' மே 31, 2024 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவிலின் புனிதத்தன்மையை பராமரிக்க, கோவில் வளாகத்தில் இருந்து 200 மீட்டர் சுற்றளவில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் காவல்துறை, யாத்ரீகர்கள் முன் பதிவு செய்யாமல் தங்கள் பயணத்தைத் தொடங்க வேண்டாம் என்று வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது மற்றும் யாத்திரை பாதையில் ஒழுங்குநிலை பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக 'ஆபரேஷன் மர்யாதா' தொடங்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில், சார் தாம் சீசனில் 200க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் இறந்தனர். அதற்கு முதன்மையான கரணம் கடுமையான வானிலை மற்றும் மாரடைப்பு எனக்கூறப்பட்டது. கேதார்நாத் தாம் பாதையில் தான் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் (96) பதிவாகின.