சென்னையிலிருந்து நெல்லை வந்த அரசு பேருந்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்கள்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசு விரைவு பேருந்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட அரசு விரைவுப் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், இன்று காலை 11 மணியளவில் நெல்லை வண்ணாரப்பேட்டை பணிமனைக்கு வந்தது. அங்கே பஸ்சை சுத்தம் செய்யும் போது, சீட்டுக்கு அடியில் துப்பாக்கி மற்றும் அரிவாள் ஆகிய பயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து பேருந்தின் நடத்துனரும், ஓட்டுனரும் பாளையம்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் அளித்த புகாரின் பேரில், சீட்டுக்கு அடியில் துப்பாக்கி, அரிவாள் வைத்தது யார் என்பது குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
embed
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்
#JustIn | ▪️ சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள் பறிமுதல். ▪️ நெல்லை வண்ணாரப்பேட்டை பணிமனையில் பேருந்தை சுத்தம் செய்யும்போது ஆயுதங்கள் கண்டுபிடிப்பு. ▪️ ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி... pic.twitter.com/EYqu3Zkoqb— Sun News (@sunnewstamil) May 15, 2024