இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

'அயோத்தி ராமர் கோவிலை கட்டவிடாமல் தடுத்தது காங்கிரஸ் கட்சி': அமித்ஷா 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை கடுமையாக சாடினார்.

10 Apr 2024

பாஜக

தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரு பெண்ணை முத்தமிட்டதால் பரபரப்பு 

மேற்கு வங்க மாநிலம் மால்டா உத்தர் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி(பாஜக) வேட்பாளர் காகன் முர்மு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு பெண்ணின் கன்னங்களில் முத்தமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ஜெயலலிதா குறித்து கொச்சையாக பேசிய திமுக': பிரதமர் மோடி குற்றச்சாட்டு 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை இன்று நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்கும் வகையில், திமுக கட்சி பெண்களை அவமரியாதை செய்வதாகவும், தமிழகத்தை "பழைமைவாத சிந்தனையில் சிக்க வைத்துள்ளதாகவும்" குற்றம்சாட்டினார்.

10 Apr 2024

டெல்லி

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சி மற்றும் பதவியில் இருந்து ராஜினாமா 

டெல்லி அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் தனது பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சி(ஆம் ஆத்மி) இரண்டிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

10 Apr 2024

டெல்லி

அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டை இன்று விசாரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்

மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அதை இன்று உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதால், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

10 Apr 2024

பதஞ்சலி

பதஞ்சலி ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் வழக்கில் பதஞ்சலி நிறுவனர்கள் ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா தாக்கல் செய்த மன்னிப்புக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

10 Apr 2024

மதுரை

மதுரை அவுட்டர் ரிங் ரோட்டில் கோர விபத்து; பதைபதைக்கவைக்கும் CCTV காட்சிகள் வெளியானது

மதுரை மாவட்டத்தில் உள்ள அவுட்டர் ரிங் ரோட்டில் இன்று காலை நடைபெற்ற ஒரு விபத்தில், காரில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகினர்.

10 Apr 2024

அமீர்

"நிச்சயமாக ஒருநாள் பேசுவேன்": ED ரெய்டு குறித்து பேசிய இயக்குனர் அமீர்

நேற்று நடைபெற்ற ED ரெய்டு குறித்து இயக்குனர் அமீர் பேசியுள்ளார்.

பெங்களூரு வழக்கறிஞரின் ஆடையை அவிழ்த்து சோதனை நடத்தி ரூ.14 லட்சம் பறிப்பு

பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரிடம் இருந்து 14 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை ஏமாற்றி பறித்த ஒரு கும்பல், போதைப்பொருள் சோதனைக்காக அவரது ஆடைகளை கழற்றி அதை வீடியோவிலும் பதிவு செய்திருக்கிறது.

'எதிர்காலத்தைக் காண விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள்': அமெரிக்கத் தூதுவர் அழைப்பு 

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை பாராட்டியுள்ளார்.

10 Apr 2024

டெல்லி

மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு 

மதுபானக் கொள்கை வழக்கில் தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

"நன்றி சென்னை.. இன்றைய நாள் சிறப்பான நாள்": சென்னை ரோடு ஷோ குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு

நேற்று பிரதமர் நரேந்திர மோடி, சென்னைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தார். அதன் ஒரு பகுதியாக தி.நகர் பாண்டி பஸாரில் ரோடு ஷோ மேற்கொண்டார்.

10 Apr 2024

ரம்ஜான்

பிறை தென்படவில்லை..நாளை ரம்ஜான் என தலைமை காஜி அறிவிப்பு

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப் அறிவித்துள்ளார்.

09 Apr 2024

பாஜக

சென்னையில் பிரதமர் மோடியின் பேரணி: மக்களை சந்திக்க பிரதமர் தி நகர் ரோட்டில் பயணம்

மக்களவை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, இன்று, சென்னையில், ரோட்ஷோ நடத்தினார். தி.நகர் பகுதியில் உள்ள தியாகராய சாலையில் இந்த பேரணி நடைபெற்றது.

09 Apr 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

நேற்று வடக்கு கடலோர ஆந்திராவிலிருந்து தென் தமிழ்நாடு வரை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இப்போது கடல் மட்டத்திலிருந்து 0.9 கிமீ உயரத்தில் சூறாவளி சுழற்சியாக வடக்கு குஜராத்தில் இருந்து தெற்கு தமிழ்நாடு வரை நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரசியல் பாகுபாடின்றி ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் தலைவர்கள்; ஆர்எம்வி கடந்து வந்த பாதை

தமிழக அரசியலில் மிகவும் முக்கியமானவரும், மூத்தவருமான ஆர்.எம்.வீரப்பன், எம்ஜிஆரின் வலது கையாக இருந்தவர் என்றே கூறலாம்.

09 Apr 2024

பாஜக

'பாஜக அனில் ஆண்டனி தோல்வி அடைய வேண்டும்': அவரது தந்தை ஏ.கே.ஆண்டனி பேச்சு 

காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.ஆண்டனி, தனது மகனும், பாஜக வேட்பாளருமான அனில் ஆண்டனி, கேரளாவின் பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் "தோல்வி அடைய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

09 Apr 2024

டெல்லி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு தள்ளுபடி: அவரது கைது செல்லுபடியாகும் என நீதிமன்றம் அறிவிப்பு 

மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் தன்னை அமலாக்க இயக்குநரகம்(ED) கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

09 Apr 2024

அதிமுக

முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் இன்று காலமானார்.

09 Apr 2024

இந்தியா

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் ஹமாஸ் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேல் நாட்டவர் 

அக்டோபர் 7, 2023 ஹமாஸ் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேலியர் ஒருவர், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் இந்தியா தனது தேசத்திற்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவைப் பாராட்டி, "பிரதமர் மோடிக்கு நன்றி" என்று கூறியுள்ளார். அவர் இந்தியாவை இஸ்ரேலின் "உண்மையான நண்பர்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா எதிர்க்கட்சி சீட் ஒப்பந்தம் முடிவானது: தாக்கரேவின் கட்சி 21 இடங்களில் போட்டி

மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாதி கூட்டணி அம்மாநிலத்தின் 48 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன் காணாமல் போன இந்தியாவை சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சடலமாக மீட்பு

க்ளீவ்லேண்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் முதுகலைப் படிப்பிற்காக 2023 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயது மாணவர் சடலமாக மீட்கப்பட்டதாக நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

சென்னையிலுள்ள ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

போதைப்பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மற்றும் அவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இயக்குனர் அமீரின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

கே.கவிதா மதுபானக் கொள்கை குற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டதாகத் தெரிகிறது: நீதிமன்றம்

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதாவின் ஜாமீன் மனுவை இன்று டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது.

08 Apr 2024

தமிழகம்

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

08 Apr 2024

டெல்லி

தேர்தல் ஆணையத்திற்கு முன்பு போராட்டம் நடத்திய திரிணாமுல் எம்.பி.க்கள் கைது 

திரிணாமுல் காங்கிரஸின் 10 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, தேர்தல் ஆணையத்தின் டெல்லி தலைமையகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் இன்று ஈடுபட்டது. அதனை தொடர்ந்து போலீஸார் அந்த 10 பேரையும் கைது செய்தனர்.

08 Apr 2024

பாஜக

இந்த முறை தமிழகத்தில் பாஜக வெற்றிபெறுமா? பிரசாந்த் கிஷோரின் கணிப்பு 

பொதுத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், வியூகவாதி பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் மற்றும் இந்திய எதிர்க்கட்சிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

08 Apr 2024

ஆந்திரா

குறைந்த விலையில் தரமான மதுபானம் வழங்கப்படும் என வாக்காளர்களுக்கு சந்திரபாபு நாயுடு வாக்குறுதி 

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி(டிடிபி) தலைமையிலான எதிர்க்கட்சிகள் சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஒரு தனித்துவமான வாக்குறுதியைக் கொண்டு வந்துள்ளன.

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு

தமிழகத்தில் உயர்க்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் போன்றவற்றிற்கு கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு தொடர்பான வழக்கினை மீண்டும் விசாரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

08 Apr 2024

தேர்தல்

அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு

நெல்லை மாவட்டத்தின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதும் அவரது தொண்டர்கள் சிலர் மீதும் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார்.

08 Apr 2024

நொய்டா

தண்ணீர் சறுக்கில் விளையாடிய 25 வயது நபர் பலி: நொய்டாவில் பரிதாபம் 

டெல்லியைச் சேர்ந்த 25 வயதான நபர் நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அமைந்துள்ள நீர் பூங்காவில் சறுக்கி விளையாடிய போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

08 Apr 2024

சென்னை

சென்னையில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது; யாருக்கெல்லாம் இந்த விதி பொருந்தும்?

வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத வயது முதிர்ந்தோர் மற்றும் ஊனமுற்றோருக்காக அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த தபால் வாக்குப்பதிவு.

மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம் 

டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதா தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

08 Apr 2024

பிரதமர்

நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம்

இன்னும் 10 நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும் நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

08 Apr 2024

தேர்தல்

'மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், ராகுல் காந்தி பதவி விலக வேண்டும்': பிரசாந்த் கிஷோர் 

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, "ஒதுங்கிக் கொள்ள வேண்டும்" என்றும், "ஓய்வு எடுக்க" வேண்டும் என்றும் கருத்துக்கணிப்பு வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.

'நேதாஜி முதல் பிரதமர்' என கங்கனா ரனாவத் கூறியதை கண்டித்த நேதாஜி குடும்பத்தினர்

சில தினங்களுக்கு முன்னர் நடிகையும், பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத், "நேதாஜி இந்தியாவின் முதல் பிரதமர்" என்ற கூறியதை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்பத்தினர் கடுமையாக சாடியுள்ளனர்.

07 Apr 2024

கோவை

கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: முதல்வர் ஸ்டாலினின் வாக்குறுதி

கோவையில் உலகத்தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

07 Apr 2024

குஷ்பு

பாஜக தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நடிகை குஷ்பு

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார வேலைகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.