முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்
தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் இன்று காலமானார். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் இருந்து சிலகாலமாக ஒதுங்கியிருந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு இன்று காலை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனால் அவர் சென்னை அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆர்.எம் வீரப்பன் மறைந்த முதலமைச்சரும் அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆர்-க்கு நெருக்கமானவர். அவரது அமைச்சரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இடம்பிடித்திருந்தவர். எம்ஜிஆர்-இன் மறைவுக்கு பின்னர் ஒதுங்கி இருந்த அவரை மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற செய்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் RMV. அவரின் மறைவிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
RM வீரப்பன் காலமானார்
#BREAKING || முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக் குறைவால் காலமானார் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஜெயலலிதா அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர்#ThanthiTV #RMVEERAPPAN #RIP pic.twitter.com/LMCZjTJVY2— Thanthi TV (@ThanthiTV) April 9, 2024