'எதிர்காலத்தைக் காண விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள்': அமெரிக்கத் தூதுவர் அழைப்பு
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை பாராட்டியுள்ளார். "எதிர்காலத்தைப் பார்க்க" யாராவது விரும்பினால், அவர்கள் இந்தியாவிற்கு வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். "நீங்கள் எதிர்காலத்தைப் பார்க்க விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள், நீங்கள் எதிர்காலத்தை உணர விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள், நீங்கள் எதிர்காலத்தில் உழைக்க விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள். அமெரிக்க தூதரகத்தின் தலைவராக ஒவ்வொருவருக்கும் அதைச் செய்யக்கூடிய பெரும் பாக்கியம் எனக்கு உண்டு. " என்று இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய-அமெரிக்க உறவுகள் புதிய உயரத்திற்கு சென்றுள்ளது
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனும், இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவுகளை பாராட்டி பேசியுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய சுலிவன், "பிஆர்ஐசியில் உள்ள நாடுகளான அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கூட்டாண்மை தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு புதிய உயரத்திற்கு சென்றுள்ளது" என்றார். அமெரிக்க மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தை முறியடித்தது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பரில் நிகில் குப்தா என்ற இந்தியர் மீது அமெரிக்க வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டன, அதற்கு பிறகு, தற்போது தான் இந்திய-அமெரிக்க உறவுகள் சீராகி உள்ளதாக கூறப்படுகிறது.