LOADING...
அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு
நயினார் நாகேந்திரன் உட்பட 25 பேர் மீது வழக்கு பதிவு

அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 08, 2024
01:55 pm

செய்தி முன்னோட்டம்

நெல்லை மாவட்டத்தின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதும் அவரது தொண்டர்கள் சிலர் மீதும் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார். தேர்தல் விதிகளை மீறி, இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி தினேஷ்குமார் அளித்த புகாரில், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி தேர்தல் பிரச்சாரம் செய்ததாக நயினார் நாகேந்திரன் உட்பட 25 பேர் மீது வழக்கு பதிந்துள்ளார். இதற்கிடையே இரு தினங்களுக்கு முன்னர் நெல்லை எக்ஸ்பிரஸில் பிடிபட்ட 4 கோடி மீதான விசாரணையும் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்த உள்ளது. இந்த வழக்கில் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பு உள்ளது என கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

embed

4 கோடி மீதான விசாரணை

🔴LIVE : ரூ.4 கோடி பறிமுதல் - தேர்தல் சிறப்பு குழு விசாரணை https://t.co/fGPCe9iY4l— Thanthi TV (@ThanthiTV) April 8, 2024

embed

நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு

#NainarNagendran #ElectionCommision #Nellai #Police #BJP pic.twitter.com/uErmgAM677— Tamil Kelvi (@TamilKelvi) April 8, 2024

Advertisement