மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்
டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதா தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. கவிதாவின் வழக்கமான ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி இதற்கான விசாரணை பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 15ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்தில் வைத்து பணமோசடி வழக்கில் கவிதாவை அமலாக்க இயக்குனரகம்(ED) கைது செய்தது. தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, ஆம் ஆத்மி கட்சியுடன் ஊழல் செய்த "சவுத் குரூப்"-ன் முக்கிய உறுப்பினர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.