டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சி மற்றும் பதவியில் இருந்து ராஜினாமா
செய்தி முன்னோட்டம்
டெல்லி அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் தனது பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சி(ஆம் ஆத்மி) இரண்டிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
ஊழல் இல்லாத கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் வீழ்ச்சி இது என்று ராஜ் குமார் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ஊழல் இல்லாத கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது "ஊழலில் ஈடுபட்டுள்ள" கட்சியாக மாறியுள்ளதாக ராஜ் குமார் ஆனந்த் கூறியுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கு பிரச்சனையும், ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது பிரச்சனையும் தலை தூக்கி இருக்கும் நேரத்தில் ராஜ் குமார் ஆனந்த் ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி
ஊழல் பிரச்சனைகளில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர் அடிபடுகிறது
"ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் வலுவான பிரச்சாரங்களை பார்த்த பிறகு தான் நான் அக்கட்சியில் சேர்ந்தேன். ஆனால், இன்று, ஊழல் பிரச்சனைகளில் அக்கட்சியின் பெயர் அடிபடுகிறது. அதனால்தான் நான் வெளியேற முடிவு செய்துள்ளேன்," என்று பழங்குடியின அமைச்சர் ஆனந்த் கூறியுள்ளார்.
கெஜ்ரிவால் கைது மற்றும் மதுக் கொள்கை வழக்கின் நேரடி விளைவாக, தனது பதவியிலிருந்தும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்த முதல் டெல்லி அரசாங்க அமைச்சர் இவர் ஆவார்.
கட்சியில் தலைமைப் பதவிகளை வழங்குவதில் ஆம் ஆத்மி பாரபட்சமான நடைமுறைகளை கடைப்பிடிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.