சென்னையில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது; யாருக்கெல்லாம் இந்த விதி பொருந்தும்?
வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத வயது முதிர்ந்தோர் மற்றும் ஊனமுற்றோருக்காக அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த தபால் வாக்குப்பதிவு. ஏற்கனவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்த வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்த பணி இன்று தொடங்கியது. இந்த தபால் வாக்குபதிவிற்கு வசதியாக, அவர்களின் வீடுகளுக்கே சென்று, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12டி வழங்கியுள்ளனர். பின்னர் அந்த நபர்களிடம் இருந்து அந்த வோட்டு போட்ட படிவங்களை பெற நடமாடும் குழுக்கள் (Mobile Team) அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நடமாடும் குழுவிலும், ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், ஒரு உதவி வாக்குச்சாவடி அலுவலர், ஒரு நுண்பார்வையாளர், ஒரு காவலர் மற்றும் ஒரு புகைப்பட கலைஞர் ஆகியோர் இருப்பர்.
சென்னையில் தபால் வாக்குப்பதிவு
தபால் வாக்குகள் செலுத்தும் பணி துவக்கம்... ஆர்வமுடன் படிவங்கள் வாங்கி நிரப்பிய அரசு அலுவலர்கள் #cuddalore #postalvote #govtstaffs #elections2024 #thanthitv pic.twitter.com/s4RIFjFmsv— Thanthi TV (@ThanthiTV) April 8, 2024