'அயோத்தி ராமர் கோவிலை கட்டவிடாமல் தடுத்தது காங்கிரஸ் கட்சி': அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை கடுமையாக சாடினார். "75 ஆண்டுகளாக, காங்கிரஸும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் ராமர் கோவில் கட்டுவதைத் தடுத்து நிறுத்தின. மோடியை இரண்டாவது முறையாக பிரதமராக்கினீர்கள். அவர் வழக்கை வென்றது மட்டுமல்லாமல், பூமி பூஜை செய்து ஜனவரி 22 அன்று கோவிலில் ராம் லல்லா சிலையையும் நிறுவினார்" என்று பீகார் கயாவில் நடந்த பேரணியில் அமைச்சர் அமித்ஷா கூறினார். "அவர்கள் (காங்கிரஸும் ஆர்ஜேடியும்) ஊழல் அரசியலில் ஈடுபடுகிறார்கள், அதனால்தான் ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவை நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்," என்று பீகாரின் கயாவில் நடந்த பேரணியில் அமித்ஷா கூறினார்.
'வடக்கு-தெற்கு பிரிவினையை' காங்கிரஸ் உருவாக்குவதாக குற்றச்சாட்டு
"காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும். தேசத்தை எத்தனை முறை உடைப்பீர்கள்? 1947ல் நாட்டைப் பிரித்தீர்கள். ஆனால் இப்போது மோடி ஜி நாட்டை ஆளுகிறார். இந்தியாவை உடைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்" என்று அமித்ஷா கூறினார். தொடர்ந்து எதிர்கட்சிகளை சாடிய அமித்ஷா, இந்தியாவை உடைக்க 'வடக்கு-தெற்கு பிரிவினையை' காங்கிரஸ் உருவாக்குவதாக குற்றம் சாட்டினார். "தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான மத்திய அரசும், நாட்டு மக்களும் விரும்பாத தேச பிரிவினையை உண்டாக்க வடக்கு-தெற்கு பிரிவினையை காங்கிரஸ் கட்சி உருவாக்கி வருகிறது. அவைத்தலைவர் ராகுல் காந்தி இது குறித்து மௌனம் காத்து வருகிறார்," என்று அமைச்சர் அமித்ஷா கூறினார்.