சென்னையிலுள்ள ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
செய்தி முன்னோட்டம்
போதைப்பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மற்றும் அவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இயக்குனர் அமீரின் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் போதை பொருட்கள்களை தயாரிக்க பயன்படும் பொருட்களை கைப்பற்றிய வழக்கில், ஜாபர் சாதிக் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.
இவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிப்படும் இயக்குனர் அமீர் முன்னதாக டெல்லியில் உள்ள போதை மருந்து தடுப்பு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
இதனையடுத்து, இன்று காலை முதல், சென்னையிலுள்ள ஜாபர் சாதிக்கின் இல்லம் மற்றும் சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயக்குனர் அமீர் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
அதோடு அமீரின் தி.நகர் அலுவலகத்திலும் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
embed
அமலாக்கத்துறை சோதனை
#BREAKING || சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயக்குனர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தி.நகர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் சோதனையை தொடர்ந்து, சேத்துப்பட்டு முக்தார் கார்டனில் சோதனை முக்தார் கார்டன் இல்லத்தை 2 வருடங்களுக்கு முன் அமீர் வாங்கியதாக தகவல் வீடு பூட்டியிருந்ததால்,... pic.twitter.com/OTqY65IcL4— Thanthi TV (@ThanthiTV) April 9, 2024