
"நன்றி சென்னை.. இன்றைய நாள் சிறப்பான நாள்": சென்னை ரோடு ஷோ குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு
செய்தி முன்னோட்டம்
நேற்று பிரதமர் நரேந்திர மோடி, சென்னைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தார். அதன் ஒரு பகுதியாக தி.நகர் பாண்டி பஸாரில் ரோடு ஷோ மேற்கொண்டார்.
நூற்றுக்கணக்கான மக்கள் சாலைகளின் இருபுறமும் கூடி இருக்க, பாஜகவின் மத்திய சென்னை வேட்பாளருக்கும், தென் சென்னை வேட்பாளருக்கும் வாக்கு சேகரித்து உரையாற்றினார் பிரதமர்.
சென்னை பனகல் பார்க்கில் இருந்து பாண்டிபஜார் வரை சுமார் ஒன்றரை கி.மீ தூரத்திற்கு திறந்த வாகனத்தில் பேரணியாக அந்த வீடியோவினை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, சென்னை மக்களுக்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார் பிரதமர்.
இதற்கிடையே நேற்று இரவு சென்னை ஆளுநர் மாளிகையில் இரவு தங்கிய பிரதமர், இன்று காலை வேலூர் செல்லவுள்ளார்.
அங்கே, பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வார்.
embed
நன்றி சென்னை..!
Thank you Chennai! Today was special. pic.twitter.com/9PuBCLAdni— Narendra Modi (@narendramodi) April 9, 2024
embed
வேலூரில் பிரச்சாரம்
பிரதமர் மோடி இன்று வேலூரில் பிரசாரம் வேலூர் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் பிற்பகலில் மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர், எல்.முருகனுக்கு ஆதரவாக பரப்புரை#PMModi #LMurugan #BJP #Elections2024 pic.twitter.com/kT5XvCAA6p— Thanthi TV (@ThanthiTV) April 10, 2024