Page Loader
சென்னையில் பிரதமர் மோடியின் பேரணி: மக்களை சந்திக்க பிரதமர் தி நகர் ரோட்டில் பயணம்

சென்னையில் பிரதமர் மோடியின் பேரணி: மக்களை சந்திக்க பிரதமர் தி நகர் ரோட்டில் பயணம்

எழுதியவர் Sindhuja SM
Apr 09, 2024
07:07 pm

செய்தி முன்னோட்டம்

மக்களவை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, இன்று, சென்னையில், ரோட்ஷோ நடத்தினார். தி.நகர் பகுதியில் உள்ள தியாகராய சாலையில் இந்த பேரணி நடைபெற்றது. பிரதமர் மோடியுடன் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய இடங்களுக்கான அக்கட்சியின் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். தென் சென்னையில் இருந்து தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னையிலிருந்து வினோஜ் பி செல்வம் மற்றும் வட சென்னையில் இருந்து ஆர்சி பால் கனகராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று அலங்கரிக்கப்பட்ட காரின் மேல் ஏறி நின்ற பிரதமர் மோடி, பாஜகவின் சின்னமான தாமரையை கையில் ஏந்தியபடி, நகரின் வழியாக பயணம் செய்தார்.

சென்னை

பிரதமரை பார்ப்பதற்கு கூடிய சென்னை மக்கள் 

பிரதமரை பார்க்க சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியின் கான்வாய் சென்ற பாதையில் பாஜக கொடிகள் கட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கடந்த தேர்தலில் பாஜக கட்சியை சேர்ந்த யாரும் தமிழகத்தில் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மற்ற கட்ட வாக்குகளுடன் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. 2019 ஆம் ஆண்டில், தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக 23 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் ஆளும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 8 இடங்களைப் பெற்றது.

ட்விட்டர் அஞ்சல்

சென்னையில் பிரதமர் மோடியின் பேரணி