பாஜக தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நடிகை குஷ்பு
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார வேலைகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கான கோரிக்கை கடிதத்தை, பாஜகவின் தேசிய தலைவரான ஜே.பி. நாட்டாவிற்கு கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை தனது சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளார். அதன்படி,"2019 டெல்லியில் ஒரு விபத்தில் நான் சிக்கினேன். இந்த விபத்தை தொடர்ந்து எனக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது.. இந்த காயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக எனக்கு மிகப்பெரிய வழியையும் வேதனையையும் கொடுத்து வந்தது" "இதற்காக தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகளை பெற்று வந்தாலும் இந்த காயம் குணமாகவில்லை. மேலும் என்னை பரிசோதித்த மருத்துவ குழுவினரும் தேர்தல் பிரச்சாரங்கள் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினார்கள்".
குஷ்புவின் கடிதம்
"எனினும், அதனை புறக்கணித்து பாஜகவின் காரியகர்த்தாவாக தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தேன். மருத்துவர்களின் அறிவுரைக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்ததில் வலி அதிகரித்து, உடல் நிலையும் மோசமடைந்தது. நீண்ட தூர பயணங்கள் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது என இரண்டும் தேர்தல் பிரச்சார நேரங்களில் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது". "எனவே கனத்த இதயத்துடன் தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் நான் தீவிரமாக பங்கேற்பதற்கு ஒரு இடைநிறுத்தத்தை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் என்னால் முடிந்த பங்களிப்பை செய்ய முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது" எனத்தெரிவித்துள்ளார். எனினும் சமூக வலைதள பக்கம் மூலமாக பாஜகவிற்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குஷ்புவின் கடிதம்
At times, hard decisions have to be taken and focus needs to be on one's health. I am at such a juncture today. I have dedicated myself to @BJP4India and have been following the path of our beloved PM @narendramodi ji, immersing myself in the election campaign activities. But... pic.twitter.com/tuevsqczok— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) April 7, 2024