அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை
செய்தி முன்னோட்டம்
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு தொடர்பான வழக்கினை மீண்டும் விசாரிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006-2011ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது தனது அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்து, வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு ஒதுக்கீடு செய்தார் என 2012ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தனர்.
எனினும் கடந்த 2021ஆம் ஆண்டு அவரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
இந்த வழக்கினை, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.
embed
ஐ.பெரியசாமிக்கு நிம்மதி!
#BREAKING || அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை#ministeriperiyasamy #supremecourt #india pic.twitter.com/CF4MLWj35i— Thanthi TV (@ThanthiTV) April 8, 2024