Page Loader
தண்ணீர் சறுக்கில் விளையாடிய 25 வயது நபர் பலி: நொய்டாவில் பரிதாபம் 

தண்ணீர் சறுக்கில் விளையாடிய 25 வயது நபர் பலி: நொய்டாவில் பரிதாபம் 

எழுதியவர் Sindhuja SM
Apr 08, 2024
01:16 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியைச் சேர்ந்த 25 வயதான நபர் நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அமைந்துள்ள நீர் பூங்காவில் சறுக்கி விளையாடிய போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உள்ளூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சய் மகேஸ்வரி என்பவர் தனது நான்கு நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மதியம் செக்டார் 39 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செக்டார் 38A இல் உள்ள கிரேட் இந்தியா பிளேஸ்(ஜிஐபி) என்ற மாலில் உள்ள என்டர்டெயின்மென்ட் சிட்டி வாட்டர் பூங்காவிற்குச் சென்றிருந்தார். லாக்கர்களில் தங்கள் உடைமைகளை வைத்த பிறகு, நண்பர்கள் அனைவரும் நேராக தண்ணீர் ஸ்லைடுக்குச் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவராக சென்று சறுக்கத் தொடங்கினர், அப்போது மகேஸ்வரிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

டெல்லி

சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நடந்து வருகிறது 

"அவர் ஓய்வெடுக்க தரையில் அமர்ந்தார், ஆனால் அவரது உடல்நிலை மொத்தமாக சரியில்லை. அவர் ஜிஐபி மால் அதிகாரிகளின் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள கைலாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்" என்று செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளனர். சம்பவம் நடந்தவுடன் மகேஸ்வரியின் குடும்ப உறுப்பினர்களும் நொய்டாவுக்கு வந்து சேர்ந்தனர் என்றும், அதன் பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது என்றும் கூடுதல் துணை போலீஸ் கமிஷனர்(நொய்டா) மணீஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். "நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பிறகு தான் இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும்" என்று ஏடிசிபி மிஸ்ரா கூறியுள்ளார்.