பதஞ்சலி: செய்தி

14 பதஞ்சலி உரிமங்களை உத்தரகாண்ட் ரத்து செய்ததற்கு உச்ச நீதிமன்றம் வரவேற்பு

பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான தவறான விளம்பர வழக்கில் உத்தரகாண்ட் மாநில உரிம ஆணையம் செயலற்று இருப்பதற்கு உச்ச நீதிமன்றம் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் ஆணையத்தால் 14 பதஞ்சலி தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து

பாபா ராம்தேவின் திவ்யா பார்மசி மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் மீது மருந்து விளம்பரச் சட்டத்தை மீண்டும், மீண்டும் மீறுவதாகவும், அவற்றின் 14 தயாரிப்புகளின் உற்பத்தி உரிமத்தை நிறுத்திவைப்பதாகவும், இது குறித்து புகார் அளிக்க அனுமதி அளித்துள்ளதாக உத்தரகாண்ட் அரசு, பிரமாணப் பத்திரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் கண்டித்ததன் பேரில் வெளியான பதஞ்சலியின் மன்னிப்பு அறிக்கை 

யோகா குரு ராம்தேவ் மற்றும் அவரது உதவியாளர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் புதன்கிழமை, பதஞ்சலியின் மருத்துவப் பொருட்கள் பற்றிய தவறான விளம்பரங்களுக்காக முன்னணி நாளிதழ்களில் 'புதிய' மன்னிப்பை கோரியுள்ளனர்.

தவறான விளம்பர வழக்கில் பொது மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்

பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான அவமதிப்பு வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

பதஞ்சலி ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் வழக்கில் பதஞ்சலி நிறுவனர்கள் ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா தாக்கல் செய்த மன்னிப்புக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பாக ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்

உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ராம்தேவ், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டபோதும், பதஞ்சலியின் மருந்துப் பொருட்களின் தவறான விளம்பரங்கள் குறித்த உத்தரவுகளை மீறியதற்காக பாபா ராம்தேவ் மீது உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது.

தவறான விளம்பரங்களை பரப்பிய வழக்கில் பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் 

தவறான விளம்பரங்களை பரப்பிய வழக்கில் அவமதிப்பு நோட்டீசுக்கு பதிலளிக்கத் தவறியதற்காக, பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தை உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக சாடியது. மேலும், பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.