உச்ச நீதிமன்றம் கண்டித்ததன் பேரில் வெளியான பதஞ்சலியின் மன்னிப்பு அறிக்கை
யோகா குரு ராம்தேவ் மற்றும் அவரது உதவியாளர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் புதன்கிழமை, பதஞ்சலியின் மருத்துவப் பொருட்கள் பற்றிய தவறான விளம்பரங்களுக்காக முன்னணி நாளிதழ்களில் 'புதிய' மன்னிப்பை கோரியுள்ளனர். இந்தமுறை, உச்ச நீதிமன்றம் இருவரையும் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காததற்கு கண்டித்த பிறகு, இந்த மன்னிப்பு விளம்பரம் பெரிய அளவில் இருந்தது. விளம்பரத்தில், ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா ஆகியோர்,"இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்/ஆணைகளுக்கு இணங்காததற்கு அல்லது கீழ்ப்படியாமைக்கு" தங்கள் தனிப்பட்ட தகுதியிலும், பதஞ்சலி ஆயுர்வேத் சார்பாகவும் "நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறினர். "எங்கள் விளம்பரங்களில் ஏற்பட்ட தவறுக்கு நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், மேலும் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காது என்பது எங்கள் முழு மனதுடன் அர்ப்பணிப்பு" என்று அறிக்கை தெரிவிக்கிறது.
பதஞ்சலி மன்னிப்பு
தவறாக வழிநடத்தும் பதஞ்சலி விளம்பரங்கள்
முன்னதாக, பாபா ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா ஆகியோர் கோவிட் -19 தொற்றுநோய்களின் போது கரோனில் போன்ற அதன் தயாரிப்புகளின் மருத்துவ திறன் குறித்து உயர்ந்த கூற்றுக்களை வெளியிட்டது. இதனை எதிர்த்தும், நவீன மருத்துவத்தை விமர்சித்ததற்காகவும் ராம்தேவுக்கு எதிராக. இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, வியாதிகள் மற்றும் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதாகக் கூறிய பதஞ்சலி தயாரிப்புகளின் அனைத்து விளம்பரங்களையும் நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட இந்த விளம்பரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் "நிபந்தனையற்ற மன்னிப்பு" கோரினர். எனினும் விளம்பரத்தை போலவே மன்னிப்பும் பகிரங்கமாக பொதுமக்களிடம் கேட்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதை அடுத்து இந்த விளம்பர அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.