14 பதஞ்சலி உரிமங்களை உத்தரகாண்ட் ரத்து செய்ததற்கு உச்ச நீதிமன்றம் வரவேற்பு
செய்தி முன்னோட்டம்
பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான தவறான விளம்பர வழக்கில் உத்தரகாண்ட் மாநில உரிம ஆணையம் செயலற்று இருப்பதற்கு உச்ச நீதிமன்றம் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிகாரம் எல்லாவற்றையும் மறைக்க முயற்சிக்கிறது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் குறித்து பேசிய உச்ச நீதிமன்றம், அதன் உத்தரவுகளுக்கு பதஞ்சலி இணங்கவில்லை என்று குறிப்பிட்டது.
தடுப்பூசி மற்றும் நவீன மருந்துகளுக்கு எதிராக ராம்தேவ் அவதூறு பிரச்சாரம் செய்ததாக கடந்த வருடம் இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அந்த வழக்கில், பொய் தகவல்களை பரப்பியதற்காக பதஞ்சலி நிறுவனம் ஒவ்வொரு செய்தித்தாளிலும் மன்னிப்பு விளம்பரத்தை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியா
நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு தாமதம்: நீதிமன்றம்
அதன் அசல் பதிவுகளைக் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பதஞ்சலியிடம் நீதிமன்றம் கூறி இருந்தது. ஆனால், அந்த நிறுவனம் பொது மன்னிப்பின் மின் நகலை மட்டுமே சமர்ப்பித்தது.
அதற்கு உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், பதஞ்சலி நிறுவனம் மற்றும் திவ்யா பார்மசி தயாரித்த 14 தயாரிப்புகளின் உற்பத்தி உரிமங்கள் ஏப்ரல் 15 அன்று இடைநிறுத்தப்பட்டதாக உத்தரகாண்ட் மாநில உரிம ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்நிலையில், இதற்கு பதிலளித்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு தாமதமானது என கேள்வி எழுப்பியது.
மேலும், நல்ல வேளையாக அதிகாரம் இப்போதாவது தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டதே என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.