Page Loader
உத்தரகாண்ட் ஆணையத்தால் 14 பதஞ்சலி தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து
14 தயாரிப்புகளின் உற்பத்தி உரிமத்தை நிறுத்திவைப்பதாகவும், இது குறித்து புகார் அளிக்க அனுமதி அளித்துள்ளதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது

உத்தரகாண்ட் ஆணையத்தால் 14 பதஞ்சலி தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து

எழுதியவர் Venkatalakshmi V
Apr 30, 2024
09:01 am

செய்தி முன்னோட்டம்

பாபா ராம்தேவின் திவ்யா பார்மசி மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் மீது மருந்து விளம்பரச் சட்டத்தை மீண்டும், மீண்டும் மீறுவதாகவும், அவற்றின் 14 தயாரிப்புகளின் உற்பத்தி உரிமத்தை நிறுத்திவைப்பதாகவும், இது குறித்து புகார் அளிக்க அனுமதி அளித்துள்ளதாக உத்தரகாண்ட் அரசு, பிரமாணப் பத்திரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சட்டத்திற்கு முரணான விளம்பரங்களை வெளியிடுவது அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் உட்பட கடுமையான ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கைக்கு உட்படும் என்று அறிவிக்கும் பொது அறிவிப்பை அதன் மாநில உரிம ஆணையம் வெளியிட்டுள்ளது என்று உத்தரகாண்ட் அரசு பிரமாணப் பத்திரத்தில் சமர்ப்பித்தது.

embed

14 பதஞ்சலி தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து

#NEWSUPDATE || பாபா ராம்தேவ் மீது கிரிமினல் வழக்குப் பதிவு..! | #Patanjali | #BabaRamdev | #Criminal | #Uttarakhand | #PolimerNews pic.twitter.com/ZHNMrdzLiS— Polimer News (@polimernews) April 30, 2024