'பாஜக அனில் ஆண்டனி தோல்வி அடைய வேண்டும்': அவரது தந்தை ஏ.கே.ஆண்டனி பேச்சு
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.ஆண்டனி, தனது மகனும், பாஜக வேட்பாளருமான அனில் ஆண்டனி, கேரளாவின் பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் "தோல்வி அடைய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆண்டனி, தனது மகனின் கட்சி தோற்க வேண்டும் என்றும், தனது மகனுக்கு போட்டியாக பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டனி வெற்றி பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களின் குழந்தைகள் பாஜகவில் இணையும்செயல் தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகனின் அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ஆண்டனி, "காங்கிரஸ் தான் எனது மதம்" என்று பேசியுள்ளார்.
கேரளா
'பினராயி விஜயனின் குற்றச்சாட்டுகளை கேரள மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்'
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தனது உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்திய ஏ.கே.ஆண்டனி, கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, "பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) எதிராக தனது கட்சி தொடர்ந்து போராடி வருகிறது" என்றார்.
தேசிய பிரச்சினைகளை காங்கிரஸ் கட்சி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற கேரள முதல்வர் பினராயி விஜயனின் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆண்டனி, "காங்கிரஸும், ராகுல் காந்தியும் தொடர்ந்து மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிராகப் போராடி வருகின்றனர். முதல்வர் பினராயி விஜயனின் குற்றச்சாட்டுகளை கேரள மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள் என்றும் எனக்கு தோன்றவில்லை." என்று கூறினார்.