பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் ஹமாஸ் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேல் நாட்டவர்
அக்டோபர் 7, 2023 ஹமாஸ் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த இஸ்ரேலியர் ஒருவர், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் இந்தியா தனது தேசத்திற்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவைப் பாராட்டி, "பிரதமர் மோடிக்கு நன்றி" என்று கூறியுள்ளார். அவர் இந்தியாவை இஸ்ரேலின் "உண்மையான நண்பர்" என்றும் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ் தாக்குதல் தொடங்கி ஏப்ரல் 7ஆம் தேதியுடன் 6 மாதங்கள் நிறைவடைந்தது. இதனையடுத்து, இது குறித்து பேசிய மோரன் என்பவர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத குழுவினர் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தனர்.
இதுவரை 33,207 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டடுள்ளனர்
அதன் பிறகு நடந்த போரில் இதுவரை 600 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதமாக காசாவில் நடந்த போரில் இதுவரை 33,207 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டடுள்ளனர். பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் நேற்று இந்த தகவலை தெரிவித்துள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள 2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் வீடற்றவர்கள் மற்றும் பலர் பஞ்சத்தின் ஆபத்தில் உள்ளனர் என்றும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இந்த நெருக்கடியை அடுத்து இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவிற்கு மோரன் தனது நன்றியைத் தெரிவித்தார். "அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கிய இந்திய ஆதரவை நான் பாராட்டுகிறேன். பிரதமர் மோடிக்கு நன்றி. இந்தியா இஸ்ரேலின் உண்மையான நண்பன் என்பதை நாங்கள் அறிவோம்" என்று அவர் கூறியுள்ளார்.