உலக செய்திகள்
ஷேக் ஹசீனா ஒப்படைப்பில் காலக்கெடு இல்லை! வங்கதேசத்திற்கான இந்திய தூதர் தினேஷ் திரிவேதி வெளியிட்ட பரபரப்பு தகவல்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை அந்நாட்டிடம் மீண்டும் ஒப்படைப்பது தொடர்பாக எவ்விதக் காலக்கெடுவையும் விதிக்க முடியாது என இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சிகிச்சை மையம் தீக்கிரை, 4,000 பேர் பலி! காங்கோவில் கட்டுப்பாடில்லாமல் பரவும் எபோலா வைரஸ்
ஆப்பிரிக்காவின் காங்கோ மக்களாட்சிக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
செங்கடலைக் கைப்பற்ற சவுதியின் மாபெரும் திட்டம்! ஹூதிகளுக்கு எதிராக 1 லட்சம் படைகளுடன் போருக்கு தயாராவதாக தகவல்
செங்கடல் மற்றும் சர்வதேசக் கடல் வர்த்தகத்தின் முக்கிய நுழைவாயிலான பாப் எல்-மண்டெப் ஜலசந்தி பகுதியை ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
பிளைதுபாய் சதி: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் எச்சரிக்கை; மத்திய கிழக்கில் மீண்டும் போர் வெடிக்குமா?
பிளைதுபாய் விமானத்தைத் தகர்க்க முயன்ற சதித் திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது மிகக் கடுமையான விலை செலுத்த நேரிடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே தடை செய்யப்பட்டவர்! பிளைதுபாய் இந்திய பைலட்டைத் தாக்கிய துணை பைலட் ஹமாம் அல்-ஹம்மாமி யார்?
பிளைதுபாய் FZ1073 விமான காக்பிட் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட துணை பைலட் ஹமாம் அல்-ஹம்மாமி பற்றிய முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடனடியாக சந்தைக்கு வரும் டீசல்! அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு பணிந்ததா ஐரோப்பா? கச்சா எண்ணெய் விலை சரிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஐரோப்பிய நாடுகள் தங்களிடம் தேக்கி வைத்துள்ள பெருமளவிலான டீசல் எண்ணெய் கையிருப்பிலிருந்து கணிசமான அளவை சந்தைக்கு வெளியிட உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பள்ளிகளை முற்றுகையிட்ட மாணவர்கள்! பிரான்ஸில் வன்முறையாக மாறிய போராட்டம்; 1,900 பேர் கைது
பிரான்ஸ் நாட்டில் புதிய கல்வியாண்டு தொடங்கிய சில வாரங்களிலேயே, பள்ளிகளில் நிலவும் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள், நீண்ட நேர பாடத்திட்டங்கள் மற்றும் பல்கலைக்கழக சேர்க்கை முறைகளுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு தழுவிய அளவில் தீவிரமடைந்துள்ளது.
பிளைதுபாய் சம்பவத்தை அதிகாரப்பூர்வமாக பயங்கரவாத தாக்குதலாக அறிவித்தது ஐக்கிய அரபு அமீரகம்
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் சென்ற பிளைதுபாய் FZ1073 விமானத்தின் காக்பிட்டில் வைத்து, அதை விபத்துக்குள்ளாக்க முயன்ற சம்பவத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு அதிகாரப்பூர்வமாக பயங்கரவாதத் தாக்குதல் என அறிவித்துள்ளது.
'உண்மையான போரே ஆன்மீகம்தான்!' ராணுவ தலைமையகத்தில் புதிய மத விவகாரங்கள் அலுவலகத்தை உருவாக்கியது அமெரிக்கா
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனில் மத விவகாரங்கள் அலுவலகம் என்ற புதிய அமைப்பை உருவாக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிளைதுபாய் விமான விபத்து சதி: ஈரானுக்குத் தொடர்பா? டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் சென்ற பிளைதுபாய் FZ1073 விமானத்தை காக்பிட்டில் வைத்து ஓமன் நாட்டை சேர்ந்த சக விமானி கீழே சாய்த்து விபத்துக்குள்ளாக்க முயன்ற சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'மனிதர்களுக்கு பதிலாக இனி ரோபோக்கள் தான் போர் செய்யும்!' ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனின் ஆர்மி ஆஃப் ரோபோட்ஸ் திட்டம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு உயரிய கௌரவம்! போஸ்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி டீனாக டாக்டர் கீதா சுவாமி நியமனம்
அமெரிக்காவின் புகழ்பெற்ற போஸ்டன் பல்கலைக்கழகத்தின் சோபானியன் & அவேடிசியன் மருத்துவப் பள்ளியின் புதிய டீனாக இந்திய-அமெரிக்க பெண் மருத்துவர் டாக்டர் கீதா சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல் சோதனைச் சாவடி மீது வெடிபொருள் வாகனம் மோதி வெடிப்பு! பாகிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 12 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள அமன் மேலா காவல் சோதனைச் சாவடியை இலக்கு வைத்து சனிக்கிழமை (செப்டம்பர் 26) அன்று பயங்கர தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
300 மிமீ அளவிற்கு கொட்டித் தீர்த்த கனமழை! பாங்காக்கில் 50 மாவட்டங்களிலும் பேரிடர் அவசரநிலை அறிவிப்பு
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வியாழக்கிழமை முதல் தொடர்ச்சியாக கொட்டித் தீர்த்த 300 மிமீ கனமழை காரணமாக, நகரின் அனைத்து 50 மாவட்டங்களும் வெள்ளப் பேரிடர் பகுதிகளாக ஆளுநர் சாட்சார்ட் சிட்டிபுன்ட் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.
7 நாள் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்தார் டிரம்ப்! அமெரிக்கத் தேர்தலுக்குப் பின் மீண்டும் ஈரான் மீது குண்டுவீச்சு?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் 7 நாள் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த இலக்கு கியூபாவா? 120 நாட்களில் சிறப்புப் படைகளைத் திரட்ட அமெரிக்கா திட்டம்; கரீபியன் பிராந்தியத்தில் பதற்றம்
கரீபியன் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவம் தனது அவசரகாலத் தயார்நிலையை அமைதியாக அதிகரித்து வருகிறது.
அரிசி விலை விண்ணைத் தொட்டதால் ரொட்டிக்கு மாறிய வங்கதேச மக்கள்! 4 ஆண்டுகளுக்குப் பின் இந்திய கோதுமை இறக்குமதி
வங்கதேசத்தில் மக்களின் முதன்மை உணவான அரிசியின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
டிரம்பிற்கு நீதிபதி குட்டு! சிஎன்என், பொலிடிகோ ஊடகங்களின் உரிமத்தை உடனடியாக வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்ட பிரபல செய்தி நிறுவனங்களான சிஎன்என், எம்எஸ் நவ் மற்றும் பொலிடிகோ ஆகிய ஊடகங்களுக்கு உடனடியாக மீண்டும் அனுமதி வழங்குமாறு அமெரிக்க ஃபெடரல் மாவட்ட நீதிபதி திமோதி கெல்லி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
விமான நிலையத்திற்கே நேரில் சென்ற டிரம்ப்! 11 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா வந்தடைந்த ஜி ஜின்பிங்கிற்கு ரெட் கார்பெட் வரவேற்பு
சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ அரசுமுறை பயணமாக வாஷிங்டன் சென்றடைந்தார்.
'கடைசி மூச்சு வரை போராடுவோம்!' ஐநா சபையில் புகைப்படங்களைக் காட்டி முழங்கிய ஈரான் அதிபர்; அமெரிக்க பிரதிநிதிகள் வெளிநடப்பு
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தங்கள் நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தேவையில்லாமல் போரை திணித்துள்ளதாக கடும் குற்றம்சாட்டினார்.
புதிய கட்டுப்பாடுகள்! இத்தாலி பள்ளிகளில் புர்கா, நிகாப்பிற்குத் தடை விதிக்க பிரதமர் ஜார்ஜியா மெலோனி முடிவு
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தனது பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சியின் இளைஞர் அணி மாநாட்டில் உரையாற்றுகையில், நாட்டின் பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் போன்ற முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளுக்குத் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஜி ஜின்பிங்கிற்கு விருந்தளிக்க திட்டம்! அமெரிக்காவின் அணுகுமுறையில் திடீர் மாற்றம் ஏன்?
அமெரிக்காவின் பொருளாதார சரிவுக்கு சீனாதான் முழு முதல் காரணம் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது தனது அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் காட்டி வருகிறார்.
1,600 ட்ரோன்கள், ரஷ்யா மீது உக்ரைன் வரலாறு காணாத மிகப்பெரிய தாக்குதல்; மாஸ்கோவில் 2 பேர் உயிரிழப்பு
உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) நடத்தியுள்ளது.
உக்ரைனிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் முதன்முறையாக ரஷ்யா நடத்தும் நாடாளுமன்றத் தேர்தல்; ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம்
ரஷ்யா உக்ரைன் மீது தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கி நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள சூழலில், தான் கைப்பற்றியுள்ள நான்கு உக்ரைன் பிராந்தியங்களை முதன்முறையாகத் தனது நாடாளுமன்றத் தேர்தலில் இணைத்துள்ளது.
7 கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவும் அல்லது போருக்குத் தயாராகவும்! கட்டார் வழியாக அமெரிக்காவிற்கு ஈரான் அனுப்பிய தூது
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, கத்தார் நாட்டின் தூதர்கள் வழியாக ஈரான் 7 முக்கிய நிபந்தனைகளை அனுப்பியுள்ளது.
பதற்றம் அதிகரிப்பு! ஒட்டுமொத்த மேற்காசிய நாடுகளுக்கும் பயணம் செய்யும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை
மேற்காசிய பிராந்தியத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ராணுவ மோதல்கள் மற்றும் எதிர்பாராத போர்ப் பதற்றம் காரணமாக, அங்குள்ள அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் மிகக் கடுமையான முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சவுதியில் இலங்கை தமிழருக்கு மரண தண்டனை? பிரதமர் மோடி தலையிட்டு மீட்க இலங்கை எம்பி வேண்டுகோள்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனோஜன் சிவராசா என்ற தமிழ் இளைஞர் வேலைவாய்ப்பிற்காக ஒன்பது மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்தார்.
ரியாத் சர்வதேச விமான நிலையம் அருகே ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; சவுதி அரேபியா அவசர எச்சரிக்கை
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் எரிபொருள் சேமிப்புப் பகுதி அருகே சனிக்கிழமை (செப்டம்பர் 19) பயங்கர வெடிச்சத்தம் கேட்டதுடன், அடர்ந்த கருப்புகைப் மண்டலமும் எழும்பியது.
வெள்ளை மாளிகைக்குள் நுழைய சிஎன்என், எம்எஸ் நௌ, பாலிடிகோ ஊடகங்களுக்கு டிரம்ப் தடை; காரணம் இதுதான்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிஎன்என், எம்எஸ் நௌ, மற்றும் பாலிடிகோ ஆகிய பிரபல செய்தி ஊடகங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்குத் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
கிரீன்லாந்தை ராணுவ ரீதியாகக் கைப்பற்றத் தேவையில்லை! டென்மார்க்குடன் ஒப்பந்தம் செய்தது அமெரிக்கா; டிரம்ப் அதிரடி அறிவிப்பு
ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள கிரீன்லாந்து தீவின் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசுகளுடன் வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க டிரம்பிற்கு அதிகாரம்! ரஷ்யா - ஈரான் தடைகள் சட்டத்திற்கு ஒப்புதல்
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை கடுமையான வரிகளை விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க லின்ட்சி ஓ. கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026 சட்ட மசோதாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) கையெழுத்திட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை தொழுகையின் போது கொடூரம்! பாகிஸ்தான் மசூதியில் கார் குண்டுவெடிப்பு; 16 பேர் பரிதாப பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோஹாட் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) சிறப்புத் தொழுகையின் போது காவல் நிலைய வளாக மசூதியில் சக்திவாய்ந்த தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐநாவில் ஈரான் மீதான தடைகள் கண்காணிப்பு: அமெரிக்க தீர்மானத்தை வீட்டோ செய்த ரஷ்யா, சீனா
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள ஐநா தடைகள் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் நிபுணர்கள் குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்துள்ளன.
வளைகுடா பிராந்தியத்தில் மாபெரும் பாதுகாப்பு ஒப்பந்தம்! சவுதிக்கு 48 எஃப்-35 போர் விமானங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்
சவுதி அரேபியாவுக்கு 48 எஃப்-35 லைட்னிங் II போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான 24.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் 100% சுங்க வரி! அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்; இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?
உக்ரைன் மீதான போரைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யா மீது கூடுதல் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் புதிய மசோதாவிற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
மதீனாவில் மாபெரும் ரகசிய புதையல்! 110 மில்லியன் டன் யுரேனியம் கண்டெடுப்பு; அணுசக்திப் பாதையில் சவுதி அரேபியா
சவுதி அரேபியாவின் புனித நகரமான மதீனா பிராந்தியத்தில் சுமார் 110 மில்லியன் டன் யுரேனியம் மற்றும் அரிய வகை தாதுக்கள் நிறைந்துள்ள சுரங்க படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஆற்றல் துறை அமைச்சர் இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) அறிவித்துள்ளார்.
உலகத் தலைவர்களுக்கு நடுவே யார் இந்த இந்தியர்? மோடி - ஜின்பிங் அருகே நின்று வைரலான 36 வயது அதிகாரி
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய மூவரும் கைகளைக் கோர்த்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.
லண்டன் நகரில் பிரமாண்ட கங்கை ஆரத்தி! தேம்ஸ் நதிக்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்; முழு விபரம்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற தேம்ஸ் நதிக்கரையில், இந்திய பாரம்பரியத்தின் அடையாளமான கங்கை ஆரத்தி விழா முதன்முறையாக மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
செங்கடல் துறைமுகங்களைக் கைப்பற்றிய ஹூதிகள்! சவுதி அரேபியா மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்; தீவிரமடையும் போர் மேகங்கள்
ஏமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், அந்நாட்டின் முக்கிய செங்கடல் கடலோரப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, அண்டை நாடான சவுதி அரேபியா மீது மீண்டும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
பிரிட்டன் நான்கு துண்டுகளாக உடைகிறதா? சுதந்திரம் கோரி 3 நாட்டு தலைவர்கள் அவசர கூட்டம்
கார்டிஃப்பில் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாட்டில் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய நாடுகளின் முதன்மை அமைச்சர்கள் பங்கேற்று சுயநிர்ணய உரிமைக்கான கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட உள்ளனர்.