பிளைதுபாய் விமான விபத்து சதி: ஈரானுக்குத் தொடர்பா? டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் சென்ற பிளைதுபாய் FZ1073 விமானத்தை காக்பிட்டில் வைத்து ஓமன் நாட்டை சேர்ந்த சக விமானி கீழே சாய்த்து விபத்துக்குள்ளாக்க முயன்ற சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இந்த பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியில் ஈரானுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அமெரிக்க உளவுத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. ஆரம்பகட்டத் தகவல்களின் படி ஈரான் பின்னணி இருப்பது போல் தெரிகிறது. ஒருவேளை ஈரானின் சதி உறுதிசெய்யப்பட்டால் அந்நாடு மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்." என எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு
இச்சம்பவம் குறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தாக்குதலில் ஈடுபட்ட ஓமன் நாட்டு சக விமானி தீவிரவாத இஸ்லாமிய சித்தாந்தங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
காக்பிட்டில் தாக்குதல் நடத்திய போது அவர் "என்னைக் கொல்லுங்கள், என்னைக் கொல்லுங்கள்" எனக் கத்தியதாகக் கூறிய நெதன்யாகு, சவுதி அரேபியாவின் தபூக் நகரில் கைது செய்யப்பட்டுள்ள அந்த விமானியிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகமும் இச்சம்பவத்தை பயங்கரவாத சதியாகக் கருதி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்திய பைலட்டின் வீரம்
17,000 அடி உயரத்தில் நடந்த பயங்கரம்
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, ஓமன் நாட்டுச் சக விமானி கத்தியால் இந்திய கேப்டனான ஸ்மித் மச்சாரை சரமாரியாகக் குத்தியுள்ளார்.
படுகாயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார், விமானத்தின் கட்டுப்பாட்டை எதிரியிடம் இழக்காமல் போராடினார்.
17,000 அடிக்கு மேல் வேகமாக சரிந்த விமானத்தைக் காப்பாற்ற, தனது கடைசி கட்ட ஆற்றலைப் பயன்படுத்தி காக்பிட் கதவின் பூட்டை ஸ்மித் மச்சார் திறந்துவிட்டார்.
உடனடியாக உள்ளே நுழைந்த பயணிகளும் பிற ஊழியர்களும் சேர்ந்து தாக்குதல் நடத்திய விமானியை மடக்கிப் பிடித்தனர்.
பாராட்டு
உலகத் தலைவர்கள் பாராட்டு
174 உயிர்களை தனது இரத்த வெள்ளத்திலும் சாதுரியமாக செயல்பட்டு காப்பாற்றிய மும்பையை சேர்ந்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் ஸ்மித் மச்சாரை "உண்மையான கதாநாயகன்" (True Hero) எனப் புகழ்ந்துள்ளனர்.
சவுதி அரேபிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.