Loading...
பிளைதுபாய் சதி: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் எச்சரிக்கை; மத்திய கிழக்கில் மீண்டும் போர் வெடிக்குமா?
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் எச்சரிக்கை

பிளைதுபாய் சதி: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் எச்சரிக்கை; மத்திய கிழக்கில் மீண்டும் போர் வெடிக்குமா?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 03, 2026
08:54 am

செய்தி முன்னோட்டம்

பிளைதுபாய் விமானத்தைத் தகர்க்க முயன்ற சதித் திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது மிகக் கடுமையான விலை செலுத்த நேரிடும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். துபாயிலிருந்து இஸ்ரேல் சென்ற விமானத்தில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக, ஐக்கிய அரபு அமீரக புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து இஸ்ரேல் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் ஒரு புதிய போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

தீவிரவாதம்

தீவிரவாத சித்தாந்தத்திற்கு ஆளான ஓமன் துணை பைலட்

விசாரணையின் விபரம் குறித்துப் பேசிய நெதன்யாகு, தாக்குதல் நடத்திய ஓமன் நாட்டை சேர்ந்த துணை பைலட் தீவிரவாத சிந்தனைகளுக்கு ஆட்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

174 பயணிகளுடன் சென்ற விமானத்தைக் காக்பிட் பகுதிக்குள் வைத்து மோதி பேரழிவை ஏற்படுத்துவதே அவரது முதன்மை நோக்கமாக இருந்துள்ளது.

இவருக்குப் பின்னணியில் இருந்து வழிகாட்டியது யார் என்றும், இதன் பின்னணியில் ஏதேனும் சர்வதேசத் தீவிரவாத அமைப்புகள் உள்ளனவா என்றும் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது.

எச்சரிக்கை

ஈரான் மீது திரும்பும் சந்தேகம் மற்றும் டிரம்பின் எச்சரிக்கை

இச்சம்பவத்தில் ஈரானின் தொடர்பு இருக்கலாம் என தகவல்கள் வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் தலையீடு உறுதி செய்யப்பட்டால், அந்நாடு மிகக் கடுமையாகத் தாக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் போடப்பட்ட அமைதி ஒப்பந்தம் முறிந்த நிலையில், இச்சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இருப்பினும் ஈரான் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை நேரடி ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

ADVERTISEMENT

உயிர் தப்பிய பயணிகள்

சவுதியில் அவசரத் தரையிறக்கம் மற்றும் உயிர் தப்பிய பயணிகள்

நடுவானில் காக்பிட் பகுதிக்குள் நடந்த தாக்குதலில், இந்தியக் கேப்டன் ஸ்மித் மச்சார் கத்தியால் குத்தப்பட்ட போதிலும் சமயோசிதமாக செயல்பட்டு காக்பிட் கதவைத் திறந்தார்.

உடனே விமானத்தில் இருந்த பயணிகள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்திய துணை பைலட்டை மடக்கிப் பிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து, விமானம் சவுதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் இன்றி விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்ட நிலையில், தற்போது பன்னாட்டு அளவில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT