சிகிச்சை மையம் தீக்கிரை, 4,000 பேர் பலி! காங்கோவில் கட்டுப்பாடில்லாமல் பரவும் எபோலா வைரஸ்
செய்தி முன்னோட்டம்
ஆப்பிரிக்காவின் காங்கோ மக்களாட்சிக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு வரலாற்றுப் போக்கில் மிக வேகமாகவும் கொடூரமாகவும் பரவி வரும் இந்த எபோலா நோய்த்தொற்றால், மே 15 முதல் இதுவரை 8,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,018 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டோரில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருவது அங்குப் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வேலைநிறுத்தம்
சிகிச்சை மையம் தீக்கிரை மற்றும் தீவிரமடையும் வேலைநிறுத்தம்
இந்த தூய்மைப் பணிப் போராட்டங்களுக்கு மத்தியில், இதுரி மாகாணத்தில் ஆயுதங்களைத் தேடி ராணுவம் நடத்திய சோதனையின் போது எபோலா இடைநிலை சிகிச்சை மையம் ஒன்று தீப்பற்றி முற்றிலும் அழிந்தது.
இதனால் 19,000 இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பியோடினர்.
மற்றொருபுறம், பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்துப் பனியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வீதிகளில் இறங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
நெதர்லாந்து
பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் நெதர்லாந்திற்கு மாற்றம்
காங்கோவில் எபோலா நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பை சேர்ந்த சர்வதேச ஊழியர் ஒருவருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் வியாழக்கிழமை சிறப்பு விமானம் மூலம் நெதர்லாந்திற்கு அழைத்து செல்லப்பட்டு, லைடன் பல்கலைக்கழக மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய எபோலா அலையில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச சுகாதார பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
அச்சம்
நடமாடும் ஆய்வகங்கள் மற்றும் மக்களிடையே தொடரும் அச்சம்
நோய்த்தொற்றை விரைவாகக் கண்டறிய புட்டெம்போ போன்ற பகுதிகளில் நடமாடும் மருத்துவ ஆய்வகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கு முன் முடிவுகள் வர 72 மணி நேரம் எடுத்த நிலையில், தற்போது 6 மணி நேரத்தில் சோதன முடிவுகள் வழங்கி விரைந்து சிகிச்சையளிக்க முடிகிறது.
இருப்பினும், எபோலா ஒரு போலி நோய் என நம்பும் சில பழங்குடி மக்களின் எதிர்ப்பும், அரசு மீதான நம்பிக்கையின்மையும் வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.