1,600 ட்ரோன்கள், ரஷ்யா மீது உக்ரைன் வரலாறு காணாத மிகப்பெரிய தாக்குதல்; மாஸ்கோவில் 2 பேர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) நடத்தியுள்ளது. ஒரே நாளில் 1,600-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் நடத்திய இந்தத் தாக்குதல் "முன்னெப்பொழுதும் இல்லாத ஒன்று" என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 450-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் தலைநகர் மாஸ்கோவை மட்டும் இலக்காகக் கொண்டு ஏவப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய வான் பாதுகாப்புப் படை பெரும்பாலான ட்ரோன்களைத் தடுத்து அழித்தபோதிலும், மாஸ்கோ பிராந்தியத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தேர்தலை சீர்குலைக்கத் திட்டம்
தேர்தலை சீர்குலைக்கத் திட்டமிட்டதாக மாஸ்கோ மேயர் குற்றச்சாட்டு
ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் இறுதி நாளில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், "நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்திலேயே எதிரிகள் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியுள்ளனர்.
ஆனால் அவர்களின் முயற்சி வெற்றிபெறவில்லை." என்று கூறியுள்ளார்.
இத்தாக்குதலில் மாஸ்கோவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சேதமடைந்ததாகவும், ரமேன்ஸ்கோயே பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு தீப்பற்றியதால் 400 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் விளக்கம்
தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விளக்கம்
இத்தாக்குதல் தொடர்பாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ரஷ்யாவின் போருக்கு நிதியளிக்கும் முக்கிய எண்ணெய் ஆலைகள் மற்றும் தளவாட மையங்களை இலக்காகக் கொண்டே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Palianytsia, Liutyi, Flamingo உள்ளிட்ட பல்வேறு நவீன ரக நீண்ட தூர ட்ரோன்கள் இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறிய அவர், ரஷ்யா தனது கொடூரமான போரை நிறுத்தி அமைதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தாக்குதல் தீவிரம்
ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் போர் மற்றும் தீவிரமடையும் தாக்குதல்கள்
ரஷ்யாவில் 2022-இல் போர் தொடங்கிய பிறகு நடைபெறும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.
புடினின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் மட்டுமே இதில் போட்டியிடும் நிலையில், போருக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை அளவிடும் களமாக இத்தேர்தல் பார்க்கப்படுகிறது.
உக்ரைன் கடந்த சில மாதங்களாக ரஷ்யாவின் வருவாயை முடக்கும் நோக்கில் அதன் எரிபொருள் மையங்கள் மீது நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு மத்தியிலும் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Our long-range responses had a very significant impact in the Moscow region last night. One of Russia’s key oil industry facilities and the aggressor’s logistics facility were hit. These are billions of dollars that sustain the war machine. The systems used included FP-1, RZ-100,… pic.twitter.com/ka5mlDSgb7
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) September 20, 2026