Loading...
தமிழக அரசியல் குப்பைகளை அள்ளியே ஆக வேண்டும்! மதுரையில் அண்ணாமலை ஆவேசம்
தமிழக அரசியல் குப்பைகளை அள்ளியே ஆக வேண்டும் என அண்ணாமலை பேச்சு

தமிழக அரசியல் குப்பைகளை அள்ளியே ஆக வேண்டும்! மதுரையில் அண்ணாமலை ஆவேசம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 20, 2026
03:05 pm

செய்தி முன்னோட்டம்

மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் வைகை சிற்பி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் எந்தக் கட்சியிலும் அடிப்படை உறுப்பினர்களாக இல்லை. தமிழகத்தில் உள்ள அரசியல் குப்பைகளை அள்ளியே ஆக வேண்டும். அதற்கான சரியான காலம் தற்போது வந்து கொண்டிருக்கிறது." என்று கூறினார்.

விமர்சனம்

ஜல்லிக்கட்டு சர்ச்சை மற்றும் ஆளுங்கட்சி எம்எல்ஏ மீதான விமர்சனம்

சட்டமன்றத்தில் சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா ஜல்லிக்கட்டுப் போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது என்று பேசியதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டை சர்வதேச விளையாட்டாக தரம் உயர்த்துவோம் எனக் கூறிவிட்டு, இப்போது அதற்கு எதிராகப் பேசுவது முரண்பாடானது என்றார்.

எம்எல்ஏ தவறாகப் பேசும்போது முதலமைச்சர் அவரைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என்றும், தங்கள் கட்சி ஆட்சிக்கு வரும்போது இந்து சமய அறநிலையத்துறை என்ற அமைப்பே அகற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெரியார் கொள்கைகள்

கும்பாபிஷேக டிக்கெட் விற்பனை மற்றும் பெரியாரின் கொள்கைகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் சினிமா பிளாக் டிக்கெட் விற்பது போல கும்பாபிஷேக டிக்கெட்டுகளை விற்றதாக அரசு மீது அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அவர், "பெரியாரின் பெண் இன விடுதலை மற்றும் சாதி ஒழிப்புக் கொள்கைகளை நான் ஏற்கிறேன்.

ஆனால், அவரது கடவுள் மறுப்புக் கொள்கையையும் பிராமண துவேஷத்தையும் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது." என்றும், சட்டமன்றம் அனைத்து மதங்களுக்கும் பொதுவானது என்றும் வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

தொழில் முதலீடுகள்

முதலமைச்சரின் லண்டன் பயணம் மற்றும் தொழில் முதலீடுகள்

முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து விமர்சித்த அவர், "முதலமைச்சர் லண்டனுக்கே போயிருக்க வேண்டாம். அங்கு எதுவும் இல்லை.

இந்திய நிறுவனங்கள் தான் இங்கிலாந்தில் முதலீடு செய்து வருகின்றன.

எனவே, முதலமைச்சர் இங்குள்ள உள்நாட்டு நிறுவனங்களை அணுகி, தமிழகத்தில் இருக்கும் தொழில்துறையையும் தொழில்முனைவோரையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் திரளான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT