Loading...
ரோஹித் சர்மா விவகாரத்தில் விரிசல்: தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அகர்கர் விலக முடிவு
தலைமைத் தேர்வாளர் பதவியில்நீடிக்க விருப்பமில்லை என அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா விவகாரத்தில் விரிசல்: தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அகர்கர் விலக முடிவு

எழுதியவர் Vasuki
Sep 19, 2026
04:14 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் பதவிக் காலம் வரும் அக்டோபர் 4-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அப்பொறுப்பில் நீடிக்க விருப்பமில்லை என அஜித் அகர்கர் பிசிசிஐ-க்குத் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பிசிசிஐயின் 95-வது வருடாந்திரப் பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, பதவிக்காலம் முடிய இன்னும் 15 நாட்கள் எஞ்சியுள்ளதாகவும், கிரிக்கெட் உலகில் 15 நாட்கள் என்பது நீண்ட அவகாசம் என்பதால் தகுந்த நேரத்தில் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறினார். தேர்வுக்குழு தலைவர் பதவி நீட்டிப்பு மற்றும் மாற்றங்கள் குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் பிசிசிஐ நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்து வேறுபாடு

ரோஹித் சர்மா தேர்வு விவகாரமும் அகர்கரின் அதிருப்தியும்

2027 உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான திட்டமிடல்களைத் தேர்வுக்குழு ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், மூத்த தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவைத் தாண்டி அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிக்கத் தேர்வுக்குழு முடிவு செய்திருந்தது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இது ரோஹித் சர்மாவிடம் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இருப்பினும், வரும் செப்டம்பர் 27 முதல் தொடங்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா மீண்டும் சேர்க்கப்பட்டார்.

தேர்வுக்குழுவின் தொலைநோக்குத் திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததும், இதில் பிசிசிஐ உயர் மட்டத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுமே பதவியிலிருந்து விலக அகர்கர் முடிவெடுத்ததற்குக் காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாதனைப் பயணம் 

பிசிசிஐ எதிர்கொள்ளும் சவால்கள்

2023 ஜூலையில் தலைமைத் தேர்வாளராகப் பொறுப்பேற்ற அஜித் அகர்கரின் பதவிக்காலத்தில், இந்திய அணி 2023 மற்றும் 2025 ஆசியகோப்பைகள், 2024 மற்றும் 2026 டி20 உலககோப்பைகள் மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி வென்றது.

மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக ஷுப்மன் கில்லையும், டி20கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரையும் முன்னிறுத்தி வெற்றிகரமான தலைமை மாற்றத்தைத் தேர்வுக்குழு செயல்படுத்தியது.

அக்டோபர் மத்தியில் தொடங்கும் நியூசிலாந்து தொடருக்கு முன்பாக புதிய தலைமைத் தேர்வாளரை நியமிக்க வேண்டிய கட்டாயம் பிசிசிஐ-க்கு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் 2027 மினி ஏலம் வரும் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் நடைபெறவுள்ளதாகவும், அருண் துமால் மற்றும் கைருல் மஜும்தார் ஐபிஎல் நிர்வாகக் குழுவிற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT