20 ஆண்டுகளுக்கு முந்தைய கொடூர வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சுரேந்திர கோலி தற்கொலை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவையே உலுக்கிய 2006 ஆம் ஆண்டின் நொய்டா நிதாரி தொடர் சிறுவர்கள் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சுரேந்திர கோலி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 50 வயதைக் கடந்த கோலி, உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் தான் நடத்தி வந்த டீக்கடையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் மரணம் குறித்து அம்மாநில காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதலை
அனைத்து வழக்குகளிலிருந்தும் சுரேந்திர கோலி விடுதலை
2025 நவம்பர் மாதத்தில் வெளியான முக்கிய தீர்ப்பின் மூலம், கோலிக்கு எதிரான 13-வது மற்றும் கடைசி வழக்கிலிருந்தும் அவர் முற்றிலும் விடுவிக்கப்பட்டார்.
இதற்கு முன்பாகவே 12 வழக்குகளில் அவர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த இறுதித் தீர்ப்பு அவரை வழக்குகளில் இருந்து முழுமையாக விடுதலை செய்தது.
சுரேந்திர கோலிக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட தடயவியல் சான்றுகளில் பெரும் குறைபாடுகள் இருந்ததாகவும், உறுப்பு திருட்டு கோணத்தில் சரியான விசாரணை நடத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
ஹவுஸ் ஆஃப் ஹாரர்ஸ்
நிதாரி ஹவுஸ் ஆஃப் ஹாரர்ஸ் வழக்கின் பின்னணி
2006 டிசம்பரில் நொய்டா நிதாரி கிராமத்தில் உள்ள மொனிந்தர் சிங் பாந்தரின் வீட்டின் பின்னால் இருந்த சாக்கடையில் சிறுவர்களின் எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கொடூர கொலைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
குறைந்தது 19 குழந்தைகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த வீடு ஹவுஸ் ஆஃப் ஹாரர்ஸ் என அழைக்கப்பட்டது.
வீட்ட உரிமையாளர் பாந்தர் மற்றும் அங்குப் பணியாற்றிய சுரேந்திர கோலி இருவரையும் சிபிஐ கைது செய்து வழக்கு பதிவு செய்தது.
இறுதி அத்தியாயம்
தீர்க்கப்படாத வழக்கின் இறுதி அத்தியாயம்
2009 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் சிறுமிகளைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக கோலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2007-ல் நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன்பின்னர் போதிய சாட்சிகள் இல்லாததால் பாந்தர் மற்றும் கோலி இருவரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.
இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய விடை தெரியாத கொலை வழக்காக மாறிய நிதாரி வழக்கில், சுரேந்திர கோலியின் மரணம் ஒரு முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது.