Loading...
ஏற்கனவே தடை செய்யப்பட்டவர்! பிளைதுபாய் இந்திய பைலட்டைத் தாக்கிய துணை பைலட் ஹமாம் அல்-ஹம்மாமி யார்?
பிளைதுபாய் இந்திய பைலட்டைத் தாக்கிய துணை பைலட் ஹமாம் அல்-ஹம்மாமியின் பின்னணி

ஏற்கனவே தடை செய்யப்பட்டவர்! பிளைதுபாய் இந்திய பைலட்டைத் தாக்கிய துணை பைலட் ஹமாம் அல்-ஹம்மாமி யார்?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 03, 2026
08:35 am

செய்தி முன்னோட்டம்

பிளைதுபாய் FZ1073 விமான காக்பிட் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட துணை பைலட் ஹமாம் அல்-ஹம்மாமி பற்றிய முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே 2024-இல் ஓமன் ஏர் நிறுவனத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகத் தடை செய்யப்பட்டவர் ஆவார். இத்தகைய தீவிர பின்னணி கொண்ட ஒருவர், இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரைத் தாக்கி 174 பயணிகளுடன் சென்ற விமானத்தை அழிக்க முயன்ற சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

தடை விதிப்பு

ஓமன் ஏர் நிறுவனத்தால் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை

துணை பைலட் ஹமாம் அல்-ஹம்மாமி ஏற்கனவே தீவிரவாத இணையதளங்களை பார்வையிட்டதும், அவரிடம் தீவிரவாத பொருட்கள் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டிலேயே ஓமன் ஏர் நிறுவனம் இவரைப் பறக்கும் பணிகளிலிருந்து நீக்கி, வெறும் நிர்வாக பணிக்கு மாற்றியிருந்தது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் கொண்ட ஒருவர் எவ்வாறு பிளைதுபாய் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார் என்றும், இஸ்ரேல் செல்லும் விமானத்தில் இயக்க அனுமதிக்கப்பட்டார் என்றும் பன்னாட்டுப் புலனாய்வு அமைப்புகள் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.

அடையாளம்

சதித் திட்டத்தில் ஈடுபட்ட துணை பைலட் அடையாளம்

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட துணை பைலட் ஓமன் நாட்டை சேர்ந்த 29 வயதான ஹமாம் அல்-ஹம்மாமி என பன்னாட்டு செய்தி நிறுவனங்களின் அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இவர் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி வழியாக விமான மேலாண்மைப் படிப்பை முடித்தவர் ஆவார்.

தாக்குதலுக்கு பிறகு சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இவர், தற்போது மேலதிக விசாரணைக்காக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

ADVERTISEMENT

பேரழிவு திட்டம்

விமானத்தை மோதி பேரழிவை ஏற்படுத்த திட்டம்

கைது செய்யப்பட்டுள்ள ஹமாம் அல்-ஹம்மாமி அமீரக புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

காக்பிட் பகுதிக்குள் இந்திய கேப்டனைத் தாக்கி வீழ்த்திய பிறகு, விமானத்தை இஸ்ரேல் நிலப்பரப்பில் மோதி பெரிய அளவிலான பேரழிவை ஏற்படுத்துவதே தனது முதன்மை நோக்கம் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் விமான ஓட்டிகளைத் தேர்வு செய்யும் பாதுகாப்புப் பரிசோதனை முறைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT