Loading...
கிரீன்லாந்தை ராணுவ ரீதியாகக் கைப்பற்றத் தேவையில்லை! டென்மார்க்குடன் ஒப்பந்தம் செய்தது அமெரிக்கா; டிரம்ப் அதிரடி அறிவிப்பு
கிரீன்லாந்தை பாதுகாப்பை பெறும் வகையில் டென்மார்க்குடன் ஒப்பந்தம் செய்தது அமெரிக்கா

கிரீன்லாந்தை ராணுவ ரீதியாகக் கைப்பற்றத் தேவையில்லை! டென்மார்க்குடன் ஒப்பந்தம் செய்தது அமெரிக்கா; டிரம்ப் அதிரடி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 19, 2026
08:05 am

செய்தி முன்னோட்டம்

ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள கிரீன்லாந்து தீவின் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசுகளுடன் வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பல மாதங்களாக கிரீன்லாந்தை ராணுவப் படை பலத்தால் கைப்பற்றப் போவதாக பயமுறுத்தி வந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்காவிற்குப் நிரந்தர பாதுகாப்புப் பொறுப்புகளை வழங்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

டென்மார்க்கின் இறையாண்மை

டென்மார்க்கின் இறையாண்மை மற்றும் ஒப்பந்தத்தின் முக்கியப் பிரிவுகள்

இந்த ஒப்பந்தம் கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கின் இறையாண்மை, நிலப்பரப்பு ஒருங்கிணைப்பு மற்றும் மக்களின் சுயநிர்ணய உரிமையை முழுமையாக அங்கீகரிக்கிறது என டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், கிரீன்லாந்தில் அமெரிக்கா தனது ராணுவ பிரசன்னத்தை உடனடியாக அதிகரிக்கவும், கூடுதல் ராணுவ கட்டமைப்புகளை தன்னிச்சையாக உருவாக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

அடுத்த வாரம் ஐநா பொதுச் சபை கூட்டத்தின் போது இதில் கையெழுத்திடப்பட உள்ளது.

கடுமையான விதிகள்

ரஷ்யா மற்றும் சீனாவிற்குத் தடை விதிக்கும் கடுமையான விதிகளும்

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், நேட்டோ அல்லாத பிற நாடுகளின் ராணுவ முகாம்கள் கிரீன்லாந்தில் அமைவதைத் தடுப்பதாகும்.

குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கிரீன்லாந்தின் உணர்திறன் மிக்க துறைகளில் முதலீடு செய்வதற்கும், படைகளை நிறுத்துவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் எந்தவொரு எதிரி நாட்டின் ஆதிக்கத்தையும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் அனுமதிக்க முடியாது என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

எதிர்கால நிலைப்பாடு

சர்வதேச தூதரகத் தாக்கங்கள் மற்றும் எதிர்கால நிலைப்பாடு

1951 ஆம் ஆண்டின் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்கா கிரீன்லாந்தில் பிடுஃபிக் விண்வெளித் தளத்தை பராமரித்து வருகிறது.

புதிய ஒப்பந்தத்தின் மூலம் எதிர்காலத்தில் கிரீன்லாந்து தனிநாடாக மாறினாலும் அமெரிக்காவின் இந்த பாதுகாப்பு உரிமைகள் காலாவதியாகாது.

நேட்டோ நட்பு நாடான டென்மார்க்கை மிரட்டி பணிய வைப்பதாக ஐரோப்பிய நாடுகள் அதிருப்தி தெரிவித்த போதிலும், வரவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக இதனை தனது பெரிய வெளியுறவு சாதனையாக டிரம்ப் முன்னிறுத்துகிறார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT