விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் வார்னர்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து, சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறார் ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான 37 வயது டேவிட் வார்னர்.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31) நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒயிட் வாஷ் ஆவதை தவிர்த்தது.

ஐஎஸ்எல் கால்பந்து லீக் : ஜாம்ஷெட்பூர் எஃப்சியின் பயிற்சியாளராக காலித் ஜமீல் நியமனம்

இந்தியன் சூப்பர் லீக் அணியான ஜாம்ஷெட்பூர் எஃப்சி, இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளராக காலித் ஜமீலை நியமிப்பதாக ஞாயிற்றுக்கிழமை (டிச.31) அறிவித்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க பாகிஸ்தான் முடிவு

ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் தொடங்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 21 வயதான தொடக்க ஆட்டக்காரர் சைம் அயூப்பை பாகிஸ்தான் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடுவர்கள் ஸ்டேடியத்தில் இருந்து வெளியேற்றம்; அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்கன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை (டிச.30) அரையிறுதிக்கு முன்னதாக அரங்கேறிய சம்பவங்கள் கிரிக்கெட் உலகை அதிர வைத்துள்ளன.

ஃபிரீ ஃபையர் மேக்ஸ் பிளேயர்களுக்கு புத்தாண்டு பரிசாக சூப்பர் அறிவிப்பு

புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், ஃபிரீ ஃபையர் மேக்ஸ் (Free Fire MAX) பிளேயர்களுக்கான இலவச ரேங்க் பாதுகாப்பை கரேனா அறிவித்துள்ளது.

தேர்வுக்குழு தலைவராக இருந்துகொண்டு இப்படி செய்யலாமா? பாகிஸ்தானில் புது சர்ச்சை

அமெரிக்கன் பிரீமியர் லீக்கில் (ஏபிஎல்) செயல்பட்டு வரும் சோஹைல் தன்வீர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜூனியர் பிரிவு தேசிய தேர்வாளராக இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31) நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒயிட் வாஷ் ஆவதை தவிர்த்தது.

2024 கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு டி.குகேஷ் மற்றும் கே.ஹம்பி தகுதி

2024 ஏப்ரல் 2 முதல் 25 வரை கனடாவின் டொராண்டோவில் திட்டமிடப்பட்ட கேண்டிடேட்ஸ் செஸ் போட்டித் தொடரில் டி.குகேஷ் மற்றும் கே.ஹம்பி ஆகியோர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் எட்டாவது இடத்தைப் பிடித்து சனிக்கிழமை (டிசம்பர் 30) தகுதி பெற்றுள்ளனர்.

விருதுகளை நடைபாதையில் விட்டுச் சென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகத், சனிக்கிழமையன்று (டிசம்பர் 30), அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுகளை புதுதில்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் உள்ள நடைபாதையில் விட்டுச் சென்றார்.

அணித் தேர்வில் ரவி சாஸ்திரி-விராட் கோலி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் கருத்து

கேப்டவுனில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கும் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகேஷ் குமாருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு அளிக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 2024 பிப்ரவரியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் 2வது ODI : போராடி தோல்வி; தொடரையும் இழந்தது இந்தியா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

மல்யுத்த வீரர்களுக்கான சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜெய்ப்பூரில் பிப்ரவரி 2 முதல் 5 வரை நடைபெறும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கும் பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான தற்காலிகக் குழு சனிக்கிழமை (டிசம்பர் 30) தெரிவித்துள்ளது.

ரிஷப் பந்த் விபத்தில் சிக்கி 365 நாட்கள்; டெல்லி கேப்பிடல்ஸ் உருக்கமான பதிவு

நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மீண்டும் விளையாட்டிற்கு திரும்புவது குறித்து அதிகாரப்பூர்வ தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், ஐபிஎல் 2024 இல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே சனிக்கிழமையன்று (டிசம்பர் 30) மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் மகளிர் கிரிக்கெட் போட்டியின்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஆஃப் ஸ்பின்னர் தீப்தி ஷர்மா பெற்றார்.

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

சனிக்கிழமை (டிசம்பர் 30) இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர், இகோர் ஸ்டிமாக், ஏஎப்சி ஆசிய கோப்பை கத்தார் 2023 இல் பங்கேற்கும் 26 பேர் கொண்ட அணியை அறிவித்தார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : ஷர்துல் தாக்கூருக்கு வலைப்பயிற்சியின்போது காயம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு ஷர்துல் தாக்கூர் மூலம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிக்கான இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு

ஜனவரி 13 முதல் 19 வரை ராஞ்சியில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான 18 பேர் கொண்ட மகளிர் இந்திய ஹாக்கி அணி சனிக்கிழமை (டிசம்பர் 30) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக நீக்கம்

கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் 2வது ODI : மீண்டும் அணியில் சேர்ந்த ஸ்மிருதி மந்தனா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே இந்தியாவில் நடந்து வரும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட மகளிர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி சனிக்கிழமை (டிசம்பர் 30) நடைபெறுகிறது.

இலங்கை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை (டிசம்பர் 30) வெளியிட்ட அறிவிப்பில், அந்நாட்டு டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக வனிந்து ஹசரங்கவை நியமித்துள்ளது.

இதேநாளில் அன்று : செஞ்சூரியனில் வரலாற்று வெற்றியைப் பெற்ற இந்திய கிரிக்கெட் அணி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்பு இதேநாளில் (30 டிசம்பர் 2021) செஞ்சுரியனில் நடந்த இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இயக்குனரை பங்கம் பண்ணிய ஆஸ்திரேலிய கேப்டன்

பாக்சிங் டே டெஸ்டில் பாகிஸ்தான் தோல்வியடைந்தாலும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடியதாக கூறிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனர் முகமது ஹபீஸுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் சரியான பதிலடி கொடுத்தார்.

ரஞ்சி கோப்பை 2024 : கவனத்தில் கொள்ள வேண்டிய டாப் 5 வீரர்கள்

ரஞ்சி கோப்பையின் 2024 சீசன் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் 36 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் விளையாட உள்ளன.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) தீர்ப்பளிக்கப்பட்டது.

29 Dec 2023

பிசிசிஐ

முகமது ஷமிக்கு பதிலாக ஆவேஷ் கானை அணியில் இணைத்த பிசிசிஐ

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமிக்கு பதிலாக ஆவேஷ் கானை அணியில் சேர்த்து அறிவித்திருக்கிறது பிசிசிஐ.

2023ம் ஆண்டில் மட்டும் 2006 ரன்கள்.. புதிய சாதனை படைத்த விராட் கோலி!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்று நாட்களுக்குள்ளாகவே தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்திய அணி.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி பங்குபெரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது நேற்று தொடங்கியது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு 

ஆந்திரா மாநிலத்தினை சேர்ந்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு.

இந்தியாவிற்கு எதிராக டீன் எல்கர் அபார சதம், பாகிஸ்தான் தடுமாற்றம், மல்யுத்த சம்மேளனத்தின் விவகாரங்களை கண்காணிக்க புதிய குழு

தென்னாப்பிரிக்கா- இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 245 ரன்களுக்கு சுருண்ட நிலையில், டீன் எல்கர் சதம் அடித்தார்.

Sports Round Up: 2-வது முறையாக சதம் அடித்து KL ராகுல் சாதனை; மற்றும் பல முக்கிய விளையாட்டுச் செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று, தொடரை சமன் செய்துள்ளது.

ஐபிஎல் 2024 டைட்டில் ஸ்பான்சர் ஏலத்தில் பங்கேற்க ஃபேன்டஸி கேமிங் நிறுவனங்களுக்கு தடை

ஐபிஎல் 2024 டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கான ஏலத்தில் ஃபேன்டஸி கேமிங் நிறுவனங்கள் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : 13வது முறையாக ரபாடாவிடம் வீழ்ந்த ரோஹித் ஷர்மா

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே செஞ்சூரியனில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) தொடங்கி நடந்து வரும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மகனின் பிறந்தநாள்; இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்ட ஷிகர் தவான்

செவ்வாயன்று (டிசம்பர் 26) இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஷிகர் தவான் தனது மகன் ஜோராவரின் பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி செவ்வாய்க்கிழமை (டிச.26) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : டாஸ் போடுவதில் தாமதம்; காரணம் இதுதான்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள்; ஸ்டீவ் வாக்கின் சாதனையை முறியடித்தார் டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூத்த பேட்டர் டேவிட் வார்னர் தற்போது அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் ஆனார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : இந்தியாவின் தொடர் தோல்விக்கு காரணம் இதுதான்

ஆடவர் இந்திய கிரிக்கெட் அணி உலகம் முழுவதும் பல்வேறு சூழ்நிலைகளில் தங்களது சிறப்பான வெளிப்படுத்தி வருகிறது.