ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே சனிக்கிழமையன்று (டிசம்பர் 30) மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் மகளிர் கிரிக்கெட் போட்டியின்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஆஃப் ஸ்பின்னர் தீப்தி ஷர்மா பெற்றார். 26 வயதான இவர் முதல் வீராங்கனையாக ஐந்து விக்கெட் வீழ்த்தியதோடு, 2004இல் சென்னையில் நூஷின் அல் கதீரின் 4/41 என்ற முந்தைய சாதனையையும் முறியடித்தார். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக ஐந்து விக்கெட் வீழ்த்திய மூன்றாவது சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் தீப்தி பெற்றுள்ளார். இதற்கிடையே, இது ஒருநாள் போட்டிகளில் தீப்தி ஷர்மாவின் இரண்டாவது ஐந்து விக்கெட்டுகளாகும்.