Page Loader
2023ம் ஆண்டில் மட்டும் 2006 ரன்கள்.. புதிய சாதனை படைத்த விராட் கோலி!
2023ம் ஆண்டில் மட்டும் 2006 ரன்கள்.. புதிய சாதனை படைத்த விராட் கோலி!

2023ம் ஆண்டில் மட்டும் 2006 ரன்கள்.. புதிய சாதனை படைத்த விராட் கோலி!

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 29, 2023
02:04 pm

செய்தி முன்னோட்டம்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்று நாட்களுக்குள்ளாகவே தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்திய அணி. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இந்திய 376 ரன்களை மட்டுமே குவித்திருக்க, ஒரே இன்னிங்ஸில் 408 ரன்களைக் குவித்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்திருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. ஆனால், இந்த தருணத்தில் இந்தியாவின் ஸ்டார் பேட்டரான விராட் கோலி மற்றொரு புதிய. சாதனையைப் படைத்திருக்கிறார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 38 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 76 ரன்களையும் குவித்திருக்கிறார் கோலி. இந்த ரன்களுடன், இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்திருக்கிறார் விராட் கோலி.

கிரிக்கெட்

கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை:

ஒரே ஆண்டில் 2000 சர்வதேச ரன்களைக் கடப்பது விராட் கோலிக்கு இது முதல் முறை அல்ல, ஏழாவது முறை. ஆம், முன்னதாக 2012 (2186 ரன்கள்), 2014 (2286 ரன்கள்), 2016 (2595 ரன்கள்), 2017 (2818 ரன்கள்), 2018 (2735 ரன்கள்) மற்றும் 2019 (2455 ரன்கள்) என ஆறு முறை ஒரே ஆண்டில் 2000 ரன்களைக் கடந்திருக்கிறார் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட் விளையாடத் தொடங்கப்பட்ட 1877-ல் இருந்து இதுவரை, இந்த சாதனையை எவரும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக ஏழு முறை 2000 ரன்களைக் கடந்து அசத்தியிருக்கிறார் விராட் கோலி.