
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு
செய்தி முன்னோட்டம்
ஆந்திரா மாநிலத்தினை சேர்ந்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு.
ஐபிஎல்-போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகளில் இவர் விளையாடியுள்ளார். 2018 முதல் தற்போது வரை சிஎஸ்கே அணியின் முக்கிய பிளேயர்களுள் இவரும் ஒருவர்.
இந்நிலையில் கடந்தாண்டு நடந்த ஐபிஎல்'இல் சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தினை வென்ற இவர் தனது ஓய்வையும் அறிவித்து, அனைத்துவித போட்டிகளில் இருந்தும் விடைபெற்றார்.
இதனைத்தொடர்ந்து இவர் அரசியல் பிரவேசம் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.
அதன்படி அவர் இன்று(டிச.,28)ஆந்திர முதல்வர்.ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
இந்நிகழ்வின்போது, முதல்வரோடு, துணைமுதல்வர் நாராயணசாமி, எம்.பி.க்களான பத்திரெட்டி, மிதுன்ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அவர்கள் இவருக்கு சால்வை அணிவித்து தங்கள் கட்சியில் இணைத்து கொண்டனர்.
ட்விட்டர் அஞ்சல்
கட்சியில் இணைந்த கிரிக்கெட் வீரர்
#BREAKING | ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அம்பத்தி ராயுடு ஐக்கியம் #AmbatiRayudu | #YSRCongress | #YSRCP | #AndhraPradesh | #YSJaganMohanReddy | #JaganMohanReddy | @RayuduAmbati pic.twitter.com/o4ZSHTM2yG
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 28, 2023