இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : டாஸ் போடுவதில் தாமதம்; காரணம் இதுதான்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) தொடங்க உள்ளது. பாக்சிங் டே டெஸ்ட் போட்டியான இதில், கேப்டன் ரோஹித் ஷர்மா முதல்முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார். இதற்கிடையே, மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் டாஸ் போடுவது தாமதாகியுள்ளது. இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் இதை உறுதிப்படுத்தி உள்ளது. முன்னதாக, செஞ்சூரியனில் போட்டி தொடங்கும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அதிக மழை இருக்கும் என வானிலை அறிக்கை வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.