Page Loader
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக நீக்கம்
ஜெரால்ட் கோட்ஸி காயம் காரணமாக இந்தியா vs தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து நீக்கம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக நீக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 30, 2023
03:28 pm

செய்தி முன்னோட்டம்

கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி நீக்கப்பட்டுள்ளார். இரண்டாவது டெஸ்டில் இருந்து வெளியேறிய இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் கோட்ஸி ஆவார். முன்னதாக, கேப்டன் டெம்பா பவுமா இடது தொடை வலியால் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் கேப்டவுனில் ஜனவரி 3, 2024 அன்று தொடங்குகிறது. வழக்கமான கேப்டன் பவுமா இல்லாத நிலையில், டீன் எல்கர் தனது கடைசி போட்டியில் அணியை வழிநடத்த உள்ளார். டீன் எல்கர் இந்தியாவுக்கு எதிரான தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ஜெரால்ட் கோட்ஸி நீக்கம்