
ரிஷப் பந்த் விபத்தில் சிக்கி 365 நாட்கள்; டெல்லி கேப்பிடல்ஸ் உருக்கமான பதிவு
செய்தி முன்னோட்டம்
நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மீண்டும் விளையாட்டிற்கு திரும்புவது குறித்து அதிகாரப்பூர்வ தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், ஐபிஎல் 2024 இல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 30) ரிஷப் பந்த் விபத்தில் சிக்கி ஒரு வருடம் நிறைவடைவதை ஒட்டி, டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த பதில், மிக மோசமான விபத்தில் சிக்கினாலும், அதிர்ஷ்டவசமாக தப்பிய ரிஷப் பந்த் மிகவும் உறுதியுடனும், தன்னம்பிக்கையுடனும் தேறி வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும், 2023 ஐபிஎல் சீசனில் அவர் விளையாடாவிட்டாலும், வீரர்களுடன் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஊக்குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ரிஷப் பந்த் விபத்தில் சிக்கி ஒருவருடம் நிறைவு
365 Days since that fateful night.
— Delhi Capitals (@DelhiCapitals) December 30, 2023
Every day since then has been nothing but full of gratitude, belief, self-care, hardwork and a never-give-up approach towards making a roaring comeback in the game that runs thick through his veins 🫰🏻
Here's to seeing the unorthodox,… pic.twitter.com/y5TD35RCrS