இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் 2வது ODI : மீண்டும் அணியில் சேர்ந்த ஸ்மிருதி மந்தனா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே இந்தியாவில் நடந்து வரும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட மகளிர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி சனிக்கிழமை (டிசம்பர் 30) நடைபெறுகிறது. முதல் போட்டியில் உடல்நிலை சரியில்லாததால் விளையாடாத ஸ்மிருதி மந்தனா இந்த போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், ஷஃபாலி வர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக, முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவிய நிலையில், இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கிடையே, இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீராங்கனைகளின் பட்டியல்
இந்திய கிரிக்கெட் அணி (விளையாடும் XI) : யாஸ்திகா பாட்டியா, ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், சினே ராணா, பூஜா வஸ்த்ரகர், ரேணுகா சிங், ஸ்ரேயங்கா பாட்டீல். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி (விளையாடும் XI) : அலிசா ஹீலி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி, தஹ்லியா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், அலனா கிங், கிம் கார்த், டார்சி பிரவுன்.