Page Loader
முகமது ஷமிக்கு பதிலாக ஆவேஷ் கானை அணியில் இணைத்த பிசிசிஐ
முகமது ஷமிக்கு பதிலாக ஆவேஷ் கானை அணியில் இணைத்த பிசிசிஐ

முகமது ஷமிக்கு பதிலாக ஆவேஷ் கானை அணியில் இணைத்த பிசிசிஐ

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 29, 2023
04:56 pm

செய்தி முன்னோட்டம்

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமிக்கு பதிலாக ஆவேஷ் கானை அணியில் சேர்த்து அறிவித்திருக்கிறது பிசிசிஐ. முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் ஷமி இடம்பெற்றிருந்தாலும், அவரது உடற்தகுதியானது சரியான நிலையில் இல்லாத காரணத்தினால் அவரால் போட்டியில் பங்கெடுக்க முடியவில்லை. இந்நிலையில், இரண்டாவது போட்டியில் அவரை நீக்கி விட்டு, ஆவேஷ் கானை அணியில் இணைத்திருக்கிறது பிசிசிஐ. தென்னாப்பிரிக்க மற்றும் இந்திய அணிகள் பங்குபெறும் இரண்டானது டெஸ்ட் போட்டியானது கேப் டவுனில் ஜனவரி 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதுவரை முதல் நிலை கிரிக்கெட் போட்டிகளில், 38 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஆவேஷ் கான், அதன் மூலம் 149 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

டெஸ்ட் அணியில் ஆவேஷ் கான்: