2024 கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு டி.குகேஷ் மற்றும் கே.ஹம்பி தகுதி
2024 ஏப்ரல் 2 முதல் 25 வரை கனடாவின் டொராண்டோவில் திட்டமிடப்பட்ட கேண்டிடேட்ஸ் செஸ் போட்டித் தொடரில் டி.குகேஷ் மற்றும் கே.ஹம்பி ஆகியோர் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் எட்டாவது இடத்தைப் பிடித்து சனிக்கிழமை (டிசம்பர் 30) தகுதி பெற்றுள்ளனர். சென்னையில் நடந்த 2023 FIDE தகுதிச் சுற்று ஆட்டத்தில் முன்னிலை பெற்றதன் மூலம் கேண்டிட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றனர். 1991 முதல் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இந்தியராக இருந்த நிலையில் இந்த முறை ஆர்.பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, டி.குகேஷ், ஆர்.வைஷாலி மற்றும் கே. ஹம்பி என மொத்தம் ஐந்து பேர் தகுதி பெற்றுள்ளனர். இது செஸ் உலகில் இந்தியாவின் மிகப்பெரிய எழுச்சியாக பார்க்கப்படுகிறது.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தேர்வு பெற்ற வீரர்கள் பட்டியல்
ஆடவர் : இயன் நெபோம்னியாச்சி (ரஷ்யா), ஆர்.பிரக்ஞானந்தா (இந்தியா), ஃபேபியானோ கருவானா (அமெரிக்கா), நிஜாத் அபாசோவ் (அஜர்பைஜான்), விதித் குஜராத்தி (இந்தியா, ஹிகாரு நகமுரா (அமெரிக்கா), டி.குகேஷ் (இந்தியா) மற்றும் அலிரேசா ஃபிரோஸ்ஜா (பிரான்ஸ்). மகளிர் : லீ டிங்ஜி (சீனா), கேடெரினா லக்னோ, அலெக்ஸாண்ட்ரா கோரியச்கினா (ரஷ்யா), நூர்கியுல் சலிமோவா (பல்கேரியா), அன்னா முசிச்சுக் (உக்ரைன்), ஆர்.வைஷாலி (இந்தியா), டான் ஷோங்கி (சீனா) மற்றும் கே.ஹம்பி (இந்தியா). கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள், முதல்முறையாக ஒரே இடத்தில் விளையாடி, நடப்பு உலக சாம்பியனுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பைப் பெறுவார்கள். தற்போது, சீனாவின் டிங் லிரன் மற்றும் ஜு வென்ஜுன் ஆகியோர் உலக சாம்பியனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.