அடுத்த செய்திக் கட்டுரை

ஃபிரீ ஃபையர் மேக்ஸ் பிளேயர்களுக்கு புத்தாண்டு பரிசாக சூப்பர் அறிவிப்பு
எழுதியவர்
Sekar Chinnappan
Dec 31, 2023
02:47 pm
செய்தி முன்னோட்டம்
புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், ஃபிரீ ஃபையர் மேக்ஸ் (Free Fire MAX) பிளேயர்களுக்கான இலவச ரேங்க் பாதுகாப்பை கரேனா அறிவித்துள்ளது.
Free Fire MAX இல் இலவச ரேங்க் பாதுகாப்பு காலம் ஜனவரி 1 முதல் 7, 2024 வரை செயலில் இருக்கும். இந்த காலத்தில், தற்போதைய தரவரிசையில் புள்ளிகளை இழக்க நேரிட்டாலும், அதனால் ரேங்க் குறையாது.
இதன்மூலம், தரவரிசைப் போட்டிகளில் இதுவரை வழக்கமாக முயற்சிக்காத புதிய திறன்கள் மற்றும் உத்திகளைப் பயிற்சி செய்ய இந்த நேரத்தை பிளேயர் பயன்படுத்த முடியும்.
உங்கள் சரியான பிளே ஸ்டைலைக் கண்டுபிடித்து, ஃபிரீ ஃபையர் மேக்ஸ் ஆயுதக் களஞ்சியத்தில் மறைக்கப்பட்ட ரத்தினங்களைக் கண்டறியவும் உங்களுக்கு முடியும்.
இந்த அறிவிப்பு இ-ஸ்போர்ட்ஸ் வீரர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.